இன்னும் எத்தனை பேர் வேணும்.. ஏன் துரோகம் பண்றே.. ஆஷாவின் ஆவேசம்.. எரிக்கப்பட்ட கான்ஸ்டபிள்!
போலீஸ்காரரை தீ வைத்து எரிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்
Recommended Video
சென்னை: "உனக்கு இன்னும் எத்தனை பொண்ணுங்க வேணும்.. ஏன் எனக்கு துரோகம் செய்றே" என்று சண்டை போட்ட கள்ளக்காதலி ஆஷா, தூங்கி கொண்டிருந்த போலீஸ்காரரை உயிருடன் எரித்து தீ வைத்தார்.. இதில் தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!
சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். 30 வயதாகிறது. இவர், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 2-ம் பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ஜெயா. ஸ்கூல் படிக்கும்போதே ஜெயாவை காதலித்தவர்.. பின்னாளில் அவரையே கல்யாணம் செய்து கொண்டார். 7, 5 வயதுகளில் ஒரு மகளும், மகனும் உள்ளனர். ஆனால், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவரை விட்டு பிரிந்துள்ளார். கோர்ட்டில் விவகாரத்தும் கேட்டுள்ளனர். இப்போதைக்கு மகள் அப்பாவுடனும், மகன் அம்மாவுடனும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

தனிக்குடித்தனம்
இந்த சமயத்தில், வெங்கடேசுக்கு ஆஷா என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. ஆஷா ஏற்கனவே கல்யாணமாகி பிள்ளைகளை பெற்றவர். அவரும் அவர் குடும்பத்தை விட்டுவிட்டு, வெங்கடேசுடன் ஒரே வீட்டில் தம்பதி போல வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆத்திரம்
ஆனால், வெங்கடேசுக்கு ஆஷா, தவிர வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளதாக தெரிகிறது.. இதனால் கள்ளக்காதலர்களுக்கு தினமும் தகராறு வந்துள்ளது. வழக்கம்போல் இரவு சம்பவத்தன்றும் சண்டை வந்துள்ளது.. ஒரு கட்டத்தில் வெங்கடேஷன் தூங்க போய்விட்டார்... ஆனால் ஆஷாவுக்கு ஆத்திரம் தீரவே இல்லை.

பாத்ரூம்
அதனால் நடுராத்திரி 1 மணிக்கு ஆஷா, பெட்ரோலை எடுத்து வந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேஷ் மீது ஊற்றி, தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் உடம்பெல்லாம் தீ பரவியதால், வெங்கடேஷ் அலறி அடித்து கொண்டு, பாத்ரூமுக்குள் ஓடி, தண்ணீரை பக்கெட் பக்கெட்டாக எடுத்து உடம்பில் ஊற்றிக் கொண்டார். தீயை அணைப்பதற்குள் அக்கம்பக்கத்தினர் விரைந்து ஓடிவந்து வெங்கடேசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

வேறு ஒரு பெண்
இதையடுத்து, வெங்கடேசன் புகார் அளிக்கவும், திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஷாவை கைது செய்தனர். ஏற்கனவே மனைவி உள்ளார், அவர் பிரிந்து சென்றதும் என்னுடன் உறவு.. என்னை தவிர வேறு பெண்களுடனும் உறவு என்பதால் என்னால் தாங்க முடியவில்லை.. அதனால்தான் உயிருடன் எரித்து கொலை செய்ய முயன்றேன் என ஆஷா சொல்லவும், போலீசார் புழலில் அடைத்தனர்.

மரணம்
இதனிடையே உடம்பெல்லாம் தீயில் கருகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த வெங்கடேசன் இன்று உயிரிழந்தார். சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications