நீங்க இதை மட்டும் பண்ணி இருந்தீங்கன்னா.. உங்க போன் நம்பரே பிளாக் ஆகிடும்.. ஜாக்கிரதை.. அரசு அதிரடி
சென்னை: செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை மத்திய தொலைத்தொடர்பு இணை அமைச்சர் தேவுசிங் சவுகான் வழங்கி உள்ளார்.
இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதோடு ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
ஸ்மார்ட் போன் என்பது ஆடம்பர பொருள் என்ற நிலையில் இருந்து தற்போது அத்தியாவசிய பொருள் என்ற நிலையை அடைந்துவிட்டது.

ஸ்மார்ட் போன்
அனைத்து தட்டுகளை சேர்ந்த மக்களும் ஸ்மார்ட் போன் வைத்துள்ளனர். இதனால் சிம் கார்ட் பயன்பாடும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு ரீதியாக பல்வேறு பிரச்சனைகளும் நிலவி வருகின்றன. முக்கியமாக பல்வேறு குற்றச்செயல்களில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது சிக்கல் ஆகி உள்ளது. மேலும் சில 18 வயது நிரம்பாத நபர்கள் கூட தங்களுக்கு என்று சிம் கார்ட் வாங்கி போன் பயன்படுத்தி வருகிறார்கள். பள்ளிகளில் படிக்கும் பலர் வீட்டிற்கும் தெரிந்தோ, தெரியாமலோ போன் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில்தான் செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை மத்திய தொலைத்தொடர்பு இணை அமைச்சர் தேவுசிங் சவுகான் முக்கியமான வழங்கி உள்ளார்.

என்ன சொன்னார்?
அதன்படி தவறான அடையாள அட்டையை கொடுத்து சிம் கார்டு வாங்கி இருந்தால் அந்த போன் எண் நீக்கப்படும் என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் தெரிவித்த அவர், பலரும் நாடு முழுக்க தவறான ஆதாரங்களை கொடுத்து சிம் கார்ட் வாங்கி உள்ளனர். பலர் கொடுத்த ஆதாரங்கள், அடையாள அட்டைகள் பொய்யானது. அது வெரிஃபிகேஷன் செய்யப்படாதது, ஆதார் வரும் முன் நம்பர் வாங்கிய பலர் பொய்யான அடையாள அட்டைகளை கொடுத்துள்ளனர். இதை எல்லாம் கண்டுபிடித்து வருகிறோம்.

நீக்கம்
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 15 லட்சம் போன் எண்களை பிளாக் செய்துள்ளோம். அந்த எண்கள் செயல்படாது. சில மாதங்கள் கழித்து அந்த எண்கள் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டு விடும். பொய்யான போன் பயன்பாட்டை தடுக்கும் விதமாக இந்த பணியை செய்து வருகிறோம். தீவிரவாத செயல்கள், மோசடிகள், குற்றச்செயல்களை தடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி போன் எண்களை பிளாக் செய்து வருகிறோம். இதுவரை 15 லட்சம் எண்கள் ;பிளாக் செய்யப்பட்டு உள்ளன. வரும் நாட்களில் மேலும் எண்கள் பிளாக் செய்யப்படும், என்று கூறியுள்ளார்.

கல்லூரி
பொதுவாக கல்லூரி படிக்கும் மாணவர்கள் பலரின் எண்கள் பிளாக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது . அவர்கள்தான் பொய்யான ப்ரூப் கொடுத்து அல்லது அதிக காசு கொடுத்து ப்ரூப் இன்றி போன் எண்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதுபோன்ற நபர்களை டிரேஸ் செய்வது கடினம். பொய்யான ஆதாரம் கொடுத்து நம்பர் வாங்கிவிட்டு அந்த சிம் கார்டை வைத்து ஏதாவது தவறு செய்தால் கூட குற்றவாளிகளை எளிதாக கண்டுபிடிக்க முடியாது. எனவேதான் தவறான அடையாள அட்டையை கொடுத்து சிம் கார்டு வாங்கி இருந்தால் அந்த போன் எண் நீக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இதுவரை 15 லட்சம் எண்கள் நீக்கப்பட்டு உள்ள நிலையில் மேலும் பல லட்சம் எண்கள் வரும் நாட்களில் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications