ஆபத்து.. ஆட்சி கலைஞ்சிடுமாம்.. திமுகவிற்கு எச்சரிக்கை மணி அடிப்பது சுப்பிரமணியன் சாமி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1991ல் கலைக்கப்பட்டது போல திமுக ஆட்சி மீண்டும் கலைக்கப்படும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். அவருடைய பேச்சு காரணமாக தேசிய அளவில் அவர் விவாதங்களில் ஈடுபட்டு உள்ளார். அவருடைய ஒரு பேச்சு தற்போது இந்திய அரசியலையே உலுக்கி உள்ளது. பல்வேறு கட்சிகளை உதயநிதியின் ஒற்றை பேச்சு உலக்கி போட்டு உள்ளது.

பரபரப்பு பேச்சு: தமுஎகச சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் சமீபத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பில் 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது என்று கடுமையாக கூறினார்.

Your government will be removed says Subramanian Swamy against DMK Stalin and Udhayanidhi

அதோடு, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.

சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் என்று பேசினார்.

சுப்பிரமணியன் சாமி சர்ச்சை: இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையானது. இந்த நிலையில்தான் 1991ல் கலைக்கப்பட்டது போல திமுக ஆட்சி மீண்டும் கலைக்கப்படும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

( ஸ்டாலின் போட்ட கையெழுத்து.. வீடு தேடி வரும் பணம்.. மகளிர் உரிமைத்தொகையை விடுங்க.. அடுத்த சர்ப்ரைஸ்)

நீங்கள் நினைப்பது போல இது பழைய காலம் அல்ல. இந்துக்களுக்கு எதிராக நீங்களே என்ன வேண்டுமானாலும் பேசி விடமுடியாது. இந்துக்களுக்கு எதிராக வாய் திறப்பதை திமுக நிறுத்த வேண்டும்; இல்லை என்றால் 1991ல் கலைக்கப்பட்டது போல திமுக ஆட்சி மீண்டும் கலைக்கப்படும். சனாதனத்தை புரிந்துகொள்ள முடியாத திமுகவினர் உண்மையான திராவிடர்கள் இல்லை.

சனாதானத்தை புரிந்து கொண்டவர்களே திராவிடர்கள், என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். முன்னதாக திமுக கட்சியை தேர்தல் ஆணையம் தங்கள் பதிவில் இருந்து நீக்க வேண்டும், அவர்களின் சின்னத்தை பறிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக திமுகவிற்கு எதிராக டெல்லி தேர்தல் அலுவலர் மிசோவிற்கு கடிதம் எழுதி இருந்தார்.

Your government will be removed says Subramanian Swamy against DMK Stalin and Udhayanidhi

அதில், திமுக செயலாளர் ஒருவர் தேர்தல் ஆணைய விதிகளை மீறிவிட்டார். அதனால் கட்சி அங்கீகாரத்தை நீக்க வேண்டும். பிராமணர்களை அழித்தொழிக்க வேண்டும். அவர்களை இன ஒழிப்பு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். திராவிட இயக்கத்தை தொடங்கிய பெரியாரின் கொள்கை அது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.

இதனால் பிராமணர்கள் தமிழ்நாட்டில் தங்கள் வாக்கு உரிமையை செலுத்த முடியாத நிலை கூட ஏற்படலாம். இதை பயன்படுத்தி திமுக பல்வேறு தொகுதிகளில் வெற்றிபெற திட்டமிடுகிறது. இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்.திமுகவின் அங்கீகாரத்தை பறித்து, சின்னத்தை முடக்க வேண்டும் என்று சு. சாமி கூறியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+