"சுருதி.. லவ் பண்ண போறியா இல்லையா".. கழுத்தில் கத்தி வைத்து மிரட்டல்.. அப்பா, மகனை தூக்கிய போலீஸ்

நடிகை சுருதியை மிரட்டிய இளைஞர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சுருதி.. என்னை லவ் பண்ண போறியா இல்லையா? கல்யாணம் பண்ணிக்கோ" என்று தன்னுடைய கழுத்தில் கத்தியை வைத்து நடிகையை மிரட்டி வீடியோ வெளியிட்ட இளம் தொழிலதிபரும் அவரது தந்தையையும் போலீசார் கைது செய்தனர்.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் சித்ரா. இவர் மயிலாப்பூர் மகளிர் போலீசில் ஒரு புகார் தந்திருந்தார்.. அதில் உள்ள சுருக்கம் இதுதான்:

"என் மகள் சுருதி லண்டனில் உயர்படிப்பு படித்து வருகிறார்... அவரது கல்யாணத்துக்காக மேட்ரிமோனியில் வரன் தேடியபோது, சென்னை முகப்பேரை சேர்ந்த குழந்தைகளின் பொம்மைகள் மற்றும் ஆடைகள் விற்பனை செய்யும் இளம் தொழிலதிபர் அமுதன் வெங்கடேசன் என்பவர் அறிமுகமானார். இருவருக்கும் பிடித்ததால் திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

வீடியோ கால்

வீடியோ கால்

ஆனால், சுருதி மேல்படிப்பு படிக்க லண்டன் சென்று விட்டார்... ஆனாலும் அமுதன் சுருதிக்கு வாட்ஸ்அப் கால், ஸ்கைப் வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளார். இதே சமயத்தில் அமுதனின் அப்பா ராஜசேகரும் சுருதியிடம் பேசி வந்திருக்கிறார்... ஆனால் அமுதனின் நடவடிக்கை பிடிக்காததால் சுருதி விலக தொடங்கி உள்ளார்.. மேலும் கல்யாணமும் வேண்டாம் என்று சொல்லி விட்டார். இதையடுத்து வீடியோ காலில் அமுதன் பேசும்போது, காதலிக்க போறியா இல்லையா? கல்யாணம் செய்துக்க போறியா இல்லையா என்று தனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டல் வீடியோவை அனுப்பி உள்ளார்.. இதற்கு ராஜசேகரும் உடந்தையாக இருந்துள்ளார்.

சித்ரா

சித்ரா

இதனிடையே சுருதி சென்னை வந்தபோது, ஆசிட் வீசிவேன் என்று மிரட்டியிருக்கிறார்.. இதனால் பயந்துபோன சுருதி, தன்னிடம் சொல்லவும் புகார் அளிக்க வந்துள்ளதாக சித்ரா கூறியுள்ளார். அடுத்த மாதம் மீண்டும் சென்னைக்கு வர உள்ளதால், சுருதிக்கு பாதுகாப்பு வேண்டும், அமுதன், ராஜசேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அமுதன்

அமுதன்

அந்த புகாரின் படி விசாரணை நடத்தப்பட்டது... அப்போது மேலும் பல தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.. எப்படியோ சுருதிதான் தன் மனைவி என்று கனவில் மிதந்த அமுதன், சுருதிக்கு பல லட்சம் பணத்தை செலவு செய்திருக்கிறார்.. ஆனால் லண்டன் சென்றதும் சுருதி கல்யாணத்துக்கு மறுத்துள்ளார்.. அதனால்தான் ஆத்திரமடைந்து கொலை மிரட்டல் விடுத்தது என விசாரணையில் உறுதியானது. எனினும் அமுதன், ராஜசேகரை போலீசார் கைது செய்தனர்.. பிறகு சொந்த ஜாமீனில் வெளியே வந்தனர்.

பாலமுருகன்

பாலமுருகன்

‘ஆடி போனா ஆவணி' என்ற படத்தின் ஹீரோயின்தான் சுருதி.. ஆனால் இந்தப்படம் சரியாக ஓடவில்லை.. அதனால் மேல்படிப்பு படிக்க லண்டன் சென்றுவிட்டார்.. இதேபோல் ஏற்கனவே ஒருமுறை மேட்ரிமோனியில் வரன் பார்த்தபோது, கோவையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் சுருதியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்... இருவரும் போனில் பேசி வந்துள்ளனர்.. ஒருநாள் தனது தந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி, மருத்துவ செலவுக்கு பாலமுருகனிடம் இருந்து ரூ.45 லட்சம் பணத்தை சுருதி பறித்துள்ளார்.

பணம் கறப்பு

பணம் கறப்பு

இதற்கு பிறகு பாலமுருகன் உறவையும் சுருதி கட் செய்துவிட்டார்.. அதிர்ச்சியடைந்த பாலமுருகன் ரூ.45 லட்சம் மோசடி செய்துவிட்டதாக கோவை கமிஷனர் ஆபீசில் புகார் தந்தார்.. அப்போதுதான் மேட்ரிமோனியலில் தொழிலதிபர்கள், வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களாக குறி வைத்து சுருதி கல்யாணம் என்ற பெயரில் மோசடி செய்தது தெரியவந்தது.. பின்னர் சுருதி, மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் சித்ரா, சகோதரன் சுபாஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு பிறகு வெளியே வந்த சுருதி மேல் படிப்பு படிக்க லண்டன் சென்று விட்டார். அதற்கு பிறகு சிக்கியவர்தான் அமுதன்! இன்னும் பல கேஸ்கள் சுருதி மீது உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+