Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோபித்து கொண்டு போன தம்பி பொண்டாட்டி.. சமாதானம் செய்ய போனவர்.. அப்படியே "விழுந்து".. இப்ப ஒரு கொலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோபித்து கொண்டு போன தம்பி பொண்டாட்டியை சமாதானம் செய்ய போனவர், அப்படியே கள்ளக்காதலில் விழுந்துவிட்டார்.. இந்த கள்ளக்காதல் தற்போது கொலை வரை வந்து முடிந்துள்ளது!

ஜாபர்கான் பேட்டையை சேர்ந்தவர் குமரேசன்.. 25 வயதான இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரது மனைவி சண்முகப்பிரியா.. நன்றாக வாழ்ந்து வந்த இவர்களுக்குள் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர்.. தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.. இந்நிலையில், குமரேசன் தன்னுடைய அண்ணன் ராஜேஷை அழைத்து பிரிந்துபோன மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டுள்ளார்.

உணவு விநியோகம்

உணவு விநியோகம்

ராஜேஷூக்கு இன்னும் கல்யாணமாகவில்லை.. அவருக்கு வயது 28 ஆகிறது.. சைதாப்பேடடையில் வசித்து வருகிறார்.. உணவு விநியோகம் செய்யும் ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருபவர்.. தம்பி குடும்பத்தை வாழ வைக்க அவரது மனைவியிடம் சமாதானம் செய்து பேச்சுவார்த்தை நடத்த ராஜேஷ் சண்முகப்பிரியா வீட்டுக்கு சென்றார்.

குமரேசன்

குமரேசன்

யாருமே எதிர்பாராத வகையில், சண்முகப்பிரியாவுக்கும் ராஜேஷுக்கும் இடையே பழக்கம் வந்துவிட்டது.. இது கள்ளக்காதலாக உருமாறியது. சமாதானம் பேச போனவர், சண்முகப்பிரியாவை பல இடங்களுக்கு அழைத்து சென்று ஜாலியாக இருந்துள்ளார்.. இந்த விஷயம் குமரேசனுக்கு தெரிந்து கொதித்து போய்விட்டார்.. அதனால் ராஜேஷை கூப்பிட்டு கண்டித்துள்ளான.

சண்முகப்பிரியா

சண்முகப்பிரியா

தன் மனைவியிடம் பழக வேண்டாம் என்று பலமுறை எச்சரித்தார். ஆனாலும் கள்ள காதலர்கள் இதை காதிலேயே போட்டு கொள்ளவில்லை. இந்த சமயத்தில் ஒருநாள் தன்னுடைய வீட்டிற்கே சண்முகப்பிரியாவை அழைத்து வந்து ஜாலியாக இருந்திருக்கிறார் ராஜேஷ்.. அண்ணன் வீட்டுக்கு மனைவி சென்றதை கேள்விப்பட்டதும், விரைந்து சென்றார் குமரேசன்.

கொலை

கொலை

இருவரையும் நேரிலேயே எசகுபிசகாக பார்த்து கொதித்து போய்விட்டார்.. தகராறு வெடித்தது.. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த குமரேசன், கீழே கிடந்த இரும்பு கம்பியை எடுத்து அண்ணனை கடுமையாக தாக்கினார்.. ரத்த வெள்ளத்தில் ராஜேஷ் விழுந்ததை பார்த்ததும் குமரேசன் அங்கிருந்து தப்பினார்.. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ராஜேஷை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தும் பலனின்றி இறந்துவிட்டார்.. இதையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த குமரேசனை கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+