கிரிக்கெட் விளையாடும்போது திடீரென சரிந்து விழுந்த இளைஞர்.. மாரடைப்பால் பலி! சென்னையில் பயங்கரம்
சென்னை: தலைநகர் சென்னை அடுத்துள்ள மாதவரம் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் திடீரென உயிரிழந்த ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த நவீன உலகில் எல்லாமே இணையம் என்றாகிவிட்டது. ஷாப்பிங் முதல் அனைத்துமே உட்கார்ந்த இடத்திலேயே நடக்கிறது. அனைத்து பொருட்களும் நமது வீடுகளுக்கே தேடி வந்துவிடுகிறது.

இதனால் நாம் வெளியே செல்ல வேண்டிய தேவையே கணிசமாகக் குறைந்துவிட்டது. இதனால் நாம் ஒரே இடத்தில் உட்கார்ந்தே நீண்ட காலம் வேலை செய்யும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா காலம்: அதிலும் கொரோனா காலத்தில் ஓர்க் பர்ம் ஹோம் வந்தவுடன் வேலைக்கு ஆபீஸ் கூட செல்ல தேவையில்லை என்ற சூழல் உருவானது. இப்படி, மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் நம் பல வித உடல் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறோம். இதன் காரணமாக முன்பு அரிதாக ஏற்பட்ட நோய்ப் பாதிப்புகளும் கூட அதிகமாக ஏற்படத் தொடங்கியிருக்கிறது.
இதனால் மாரடைப்பும் கணிசமாக அதிகரித்துள்ளது. வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட மாரடைப்பு இப்போது இளைஞர்கள் மத்தியிலும் அதிகமாக ஏற்படுகிறது. இது சில நேரங்களில் உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. அதிலும் கொரோனா காலத்திற்குப் பிறகு நல்ல உடல்நிலையில் இருக்கும் இளைஞர்கள் கூடப் பட்டு பட்டென சரிந்து உயிரிழக்கும் சம்பவங்களும் கூட தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தலைநகர் சென்னை: அதுபோன்ற ஒரு மோசமான சம்பவம் தான் இப்போது சென்னையில் நடந்துள்ளது. சென்னை அடுத்துள்ள மாதவரம் அம்பேத்கர் நகர் ஜிஎன்டி சாலையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஸ்ரீராம்.. 30 வயதான அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவர் அவ்வப்போது தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அதன்படி நேற்று முன்தினம் மாலை இவர் தன் நண்பர்களுடன் மாதவரத்தில் உள்ள வி.எஸ்.மணி நகர் மைதானத்தில், கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்படவே அங்கேயே அவர் மயங்கி விழுந்தார். இதனால் பதறிய அவரது அவரது நண்பர்கள் ஆம்புலன்சுக்கு கால் செய்துள்ளனர். உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இருப்பினும், அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஸ்ரீராம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். திடீர் மாரடைப்பால் ஸ்ரீராம் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இது குறித்து மாதவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திடீர் மாரடைப்பு: கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இதுபோன்ற திடீர் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக இப்போது இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் மாரடைப்பு என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்திலும் கூட கேள்வி எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்கும் நிலையில், இது குறித்த விழிப்புணர்வு நமக்குத் தேவை. மூச்சு விடுவதில் சிரமம், தலைச் சுற்றல் மற்றும் மயக்கம், மார்பில் அழுத்தம் அல்லது லைட்டான, கைகள், மார்பு, கழுத்து, தோள்கள் வலி உணர்வு, வியர்வை மற்றும் குமட்டல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். அப்போது உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications