சுஜித் மீட்பு விவகாரம்.. சென்னையில் செல்போன் டவரில் ஏறிய இளைஞர் தற்கொலை மிரட்டல்.. பரபரப்பு
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் செல்போன் டவரில் ஏறிய இளைஞர், சுஜித்தை மீட்க அரசு முறையாக செயல்படவில்லை என்று கூறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி வருகிறார்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் எம்ஐடி மேம்பாலம் அருகே 100 மீட்டர் உயரம் உள்ள செல்போன் டவரில் ஏறிய இளைஞர் ஒருவர் கருப்பு கொடியுடன் அமர்ந்து கொண்டு தற்கொலை செய்யப்போவதாக கூறியிருக்கிறார்.

இதைபார்த்த வாகன ஓட்டிகள் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்துள்ளனர். தற்போது அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் போலீசார் அந்த இளைஞர் ஹரிகரன் என்பதை விசாரித்து அவரது செல்போன் எண் மூலம் விசாரித்து தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அந்த இளைஞர் , போலீசாரிடம், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்க அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. இது பெரும்பான்மையான மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டிப்பதாக கூறியிருக்கிறார்.
இதையடுத்து இளைஞர் ஹரிகரனை மீட்பது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. தற்போது போலீசார் இளைஞர் ஹரிகரனை பத்திரமாக கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications