2%.. தமாகா யுவராஜா வீசிய சரவெடி.. இப்பவே நிறுத்திடுங்க.. கோட்டைக்கு போன கோரிக்கை.. கவனிக்கும் திமுக
சென்னை: ஆளும் திறனற்ற திமுக அரசு, ஆயிரம் ரூபாயை சில லட்சம் பெண்களுக்கு மட்டும் உதவி தொகையாக வழங்கிவிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்திக் கொண்டிருக்கிறது, வாகன வரியையும் உயர்த்திவிட்டது என்று தமாகா இளைஞர் அணி கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் வரியை உயர்த்துவதற்கான சட்ட மசோதா, தமிழக சட்டசபையில் நிறைவேறியது.

அதன்படி, சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய 2 சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்திற்கு பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், 'கேப்'கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரியை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரொம்ப கம்மிதான்: இதுகுறித்து, அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "இப்போது தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள வரி ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தைக் காட்டிலும் குறைவுதான்.. எனினும், கர்நாடகாவில் வாகன வரி குறைவாக உள்ளதாக கூறப்பட்டது.. எனவே அதில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால், நிச்சயம் முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி தந்திருந்தார்.
எனினும், இந்த வாகன வரி உயர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.. இந்த விலை உயர்வை திரும்ப பெறவும் வலியுறுத்தி வருகிறார்கள். அந்தவகையில், தமாகா இளைஞர் அணியும் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து, தமிழ் மாநில காங்கிரஸின் இளைஞர் அணித் தலைவர் எம்.யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:
உதவித்தொகை: "ஆளும் திறனற்ற திமுக அரசு, ஆயிரம் ரூபாயை சில லட்சம் பெண்களுக்கு மட்டும் உதவி தொகையாக வழங்கிவிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்திக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, பேருந்துகளில் மறைமுகக் கட்டண உயர்வு என ஏழைகளின் வாழ்வாதாரத்துக்கு உபயோகப்படும் அனைத்து பொருட்களின் விலைகளை உயர்த்தி அவர்களது வேதனையை வேடிக்கை பார்க்கிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது சட்டசபையில் தமிழகத்தில் அனைத்துவிதமான வாகனங்களுக்கும் வாகன வரியை உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. 2 சதவீதம் வாகன வரி உயர்வு என்று மேலோட்டமாக அறிவித்து உள்ளார்கள்.
உண்மையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இதுகுறித்து விவரம் கேட்டபொழுது இருசக்கர வாகனங்களுக்கு 7,000 முதல் 8,000 ரூபாய் வரையிலும் கார் போன்ற வாகனங்களுக்கு 25,000 ரூபாய் வரையிலும், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு 50,000 ரூபாய் வரையிலும் வாகன வரி உயர்வு இருக்கும் என்று அறிவித்துள்ளார்கள்.
விண்ணை முட்டுது: ஏற்கெனவே டீசல், பெட்ரோல் விலையால் விலைவாசி விண்ணை முட்டி நிற்கிறது. இப்பொழுது திமுக அரசு அறிவித்துள்ள வாகன வரி உயர்வால் ஏழைகளின் அன்றாட வாழ்வாதாரத்துக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் பல மடங்கு விலை உயர்ந்து நிற்கும். இதனால் பாதிக்கப்படுவது ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வறுமை கோட்டுக்கீழ் வாழும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் பெரும் கஷ்டத்தையும் வேதனையையும் ஏற்படுத்தும்.
சாமானிய மக்களின் சொந்த வாகனம் வாங்கும் கனவை கலைக்கும் விதமாக அமையும். இருசக்கர வாகனம் இல்லாதவர்கள் ஆட்டோ மற்றும் சிறிய வகை கார்களை தங்களின் முக்கிய போக்குவரத்து வாகனமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலில் அவர்களுக்கு வரியை ஏற்றி இருப்பது, அதிக கட்டணம் வசூலிக்க காரணமாகிவிடும்.
கைவிட வேண்டும்: வாடகை வாகனங்களுக்கான வரியையும், இருசக்கர வாகனங்களுக்கான வரியையும் அதிகரித்திருக்க கூடாது. எனவே ஆளும் தமிழக திமுக அரசு வேறு வகையில் வருமானத்தை ஈடுகட்ட முயற்சி எடுக்க வேண்டுமே தவிர வாகன வரி உயர்வை கைவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications