எச்சரிக்கை.. சோஹோ நிறுவன ஸ்ரீதர் வேம்பு மக்களுக்கு வெளியிட்ட ஷாக் வார்னிங்.. என்ன நடந்தது?
சென்னை: இந்தியா மற்றும் உலக பொருளாதாரம் தொடர்பாக சோஹோ நிறுவன ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ஆண்டுக்கு 6.1% வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 7.8% ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி இப்படி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2022 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 13.1% என்ற GDP வளர்ச்சிக்குப் பிறகு கடந்த காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 7.8% ஆக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக இருக்கிறது என்பதை காட்டுகிறது.
பல உலக நாடுகள் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியை கண்டு வருகின்றன. சீனாவின் பொருளாதாரம் கூட வீழ்ச்சியை நோக்கி சென்று இருக்கிறது என்று உலக நாட்டு பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றன. 2023ல் இந்தியா வேகமாக வளரும் நாடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஜி 20 நாடுகள், பிரிக்ஸ் நாடுகளில் இருப்பதிலேயே இந்தியாவின் வளர்ச்சிதான் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இன்னொரு பக்கம் இந்தியாவின் இந்த ஜிடிபி வளர்ச்சி திடீரென மட்டுப்பட்டு வேகம் குறையும் அல்லது வளர்ச்சி குறையும் வாய்ப்புகள் உள்ளன என்றும் சில பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுகின்றன.
எச்சரிக்கை: இந்த நிலையில்தான் இந்தியா மற்றும் உலக பொருளாதாரம் தொடர்பாக சோஹோ நிறுவன ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். செப்டம்பரில் நாடுகளுக்கு இடையே, பல்வேறு தயாரிப்புகளின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவு சரிவு ஏற்பட்டு உள்ளதை நாம் உணர்ந்துள்ளோம்
நமது வருவாய் நிலைமை, பொதுவாக வருவாய் எப்படி இருக்கும், மற்றும் தயாரிப்பு நிலைமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால் பொருளாதாரம் சரிகிறதோ என்று தோன்றுகிறது. அதன்படி உலகப் பொருளாதாரம் மோசமடைந்து வருவதாக நான் சந்தேகிக்கிறேன்.
எச்சரிக்கையாக இருங்கள், என்று சோஹோ நிறுவன ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக நாடுகள் எச்சரிக்கை: ஏற்கனவே 023 உலகில் மிகப்பெரிய அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்று பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் - Centre for Economics and Business Research (CEBR) தெரிவித்து உள்ளது. சர்வதேச அளவில், பல்வேறு உலக நாடுகளில் இவர்கள் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க விலைவாசி உயர்ந்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. உலகம் முழுக்க அனைத்து நாடுகளின் மொத்த பொருளாதாரம் 100 ட்ரில்லியனை 2022ல் கடந்து உள்ளோம்.
இது நல்ல விஷயம். ஆனால் 2023ல் இந்த நிலைமை இருக்காது. 100 டிரில்லியன் உலக பொருளாதாரம் 2023ல் குறையும். பொருளாதார வீழ்த்தி, விலையேற்றம் காரணமாக இந்த நிலைமை ஏற்படும். உலக நாடுகள் அதிக அளவில் கடன் வாங்குவதும், பண வீக்கமும் இதற்கு காரணமாக இருக்கும். உலக நாடுகள் தங்கள் நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அதிக அளவில் கடன் வாங்கி உள்ளது. இந்த கடனுக்கான வட்டியும் உயர்ந்து கொண்டே வருகிறது. இது உலக அளவில் பொருளாதார மந்தநிலையை வரும் நாட்களில் ஏற்படுத்தலாம்.
இது தொடர்பாக பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மைய இயக்குனர் கே டேனியல் நியூஃபெல்ட், தெரிவிக்கவையில், பணவீக்கம் நம்முடைய மிகப்பெரிய பிரச்சனை. பணவீக்கம் நம்மை பாதிப்பை பெரிய அளவில் வாய்ப்புகள் உள்ளன. பணவீக்கத்தை ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள மத்திய வங்கிகள் கட்டுப்படுத்த வேண்டும். அதுதான் தற்போது மிகப்பெரிய தேவை. ஐஎம்எப் அறிவித்ததை விட நாங்கள் மேற்கொண்ட சோதனையில் சில அதிர்ச்சி அளிக்கும் முடிவுகள் வந்துள்ளன. உலகம் முழுக்க இந்த பண வீக்கம் பாதிப்பை ஏற்படுத்த போகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications