IT ஊழியர்களுக்கே வேலை இருக்காது? சீக்கிரமே வேறு வேலையை பார்த்து கொள்ளணும்! ஸ்ரீதர் வேம்பு வார்னிங்
சென்னை: இந்தக் காலத்தில் ஏஐ வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஐடி ஊழியர்கள் வேறு வேலையைப் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் சீக்கிரமே ஏற்படும் என ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். மனிதர்களை விடவும் ஏஐ மிகச் சிறப்பாக கோடிங் போடுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
AI கடந்த சில ஆண்டுகளாகவே ஏஐ படுவேகமாக வளர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் AI பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. இதனால் ஒரு பக்கம் நன்மைதான் என்றாலும் இன்னொரு பக்கம் பல துறைகளில் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீதர் வேம்பு
அதிலும் குறிப்பாக ஐடி துறையில் இதனால் பெரியளவில் வேலையிழப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இந்தியாவில் ஐடி துறையே ஒயிட் காலர் வேலையாக இருக்கிறது. பல கோடி இளைஞர்கள் அதை நம்பி இருக்கும் சூழலில், இது முக்கியமான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையே AI தொடர்பாக ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். AI மாடல்கள் தொடர்ந்து புதிய சாதனைகளை எட்டி வருவதால் கோடிங் செய்யும் ஐடி வல்லுநர்கள் வேறு வேலையைப் பார்க்க வேண்டி இருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
எந்தவொரு கோடிங் அறிவும் இல்லாமல் AI பயன்படுத்தி பகவத்கீதை செயலியை உருவாக்கியது குறித்த நெட்டிசன் ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்திருந்த நிலையில், அதற்கு இவர் பதிலளித்துள்ளார். தான் உட்பட கோடிங் எழுதும் அனைவருமே வேறு வேலையைப் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் சீக்கிரமே ஏற்படும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
வேறு வேலையைப் பார்க்க வேண்டும்!
இது தொடர்பாக அவர் தனது பதிவில் மேலும், "கோடிங் அனுபவம் இல்லாமல் ஒருவர் பகவத் கீதை செயலியை உருவாக்குகிறார். ஆந்த்ரோபிக் நிறுவனம் தங்கள் கிளாட் AI மூலம் ஒரு முழுமையான C கம்பைலரை உருவாக்கியுள்ளது. இது ஒன்றும் சாதாரணக் காரியம் இல்லை. இந்தக் கட்டத்தில், கோடிங் எழுதும் ஐடி ஊழியர்களான நாம் மாற்று வழிகளைப் பரிசீலிப்பது நல்லது. நான் என்னையும் இதில் சேர்த்துக் கொள்கிறேன். இதை நான் பீதியுடன் சொல்லவில்லை.. ஆனால் முழுமையாக ஏற்றுக்கொண்டு அமைதியாகச் சொல்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
AI புரட்சியால் உலகம் மாறி வரும் சூழலில், உலகப் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பது குறித்து கூகுளின் ஜெமினி சாட்பாட்டுடன் ஒரு விரிவான உரையாடலை நடத்தியதாகவும் வேம்பு கூறினார். ஜெமினியுடன் தான் நடத்திய உரையாடிய விவரங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். அதில் ஏஐ வந்த பிறகு உலகமும் உலக பொருளாதாரமும் எப்படி இருக்கும் என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.
Examples are now pouring in about AI-assisted Code Engineering productivity.
— Sridhar Vembu (@svembu) February 6, 2026
The quoted post is a Bhagwad Gita app.
Anthropic has built an entire C compiler with their Claude AI. That is not an easy engineering feat at all.
At this point, it is best for those of us who… https://t.co/KbgVX8G9nU
ரொம்ப புத்திசாலி
அது தொடர்பாக அவர் மேலும், "இது மிகவும் புத்திசாலித்தனமான ஒரு பொருளாதாரத் தத்துவ அறிஞருடன் விவாதிப்பது போல இருந்தது. சொந்த வேலையை விமர்சிக்கும்படி நான் கேட்டேன், அதையும் கூட ஏஐ மிகச் சிறப்பாகச் செய்தது" என்று அவர் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், ஏஐ வருகையால் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்தும் அவர் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
எதிர்காலம் எப்படி இருக்கும்!
ஏஐ யார் கைகளுக்குச் செல்கிறது.. யார் அதைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே இருக்கும் என்றும் இரண்டு வழிகளில் அது செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டினார். எல்லாம் நல்லபடியாக நடந்தால்.. தொழில்நுட்பம் மனித வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதியாக மாறிவிடும். அதன் பிறகு மனிதர்கள் தங்கள் வாழ்க்கை, குடும்பம், மண், நீர், இயற்கை, கலை, இசை, கலாச்சாரம், விளையாட்டு ஆகியவற்றில் கவனம் செலுத்தத் தேவையான நேரம் கிடைக்கும் என்றார். அதேநேரம் நேர்மாறாக எதாவது நடந்தால் ஒரு நபரிடம் ஒட்டுமொத்த கண்ட்ரோலும் குவியும் என்றும் இருண்ட உலகம் அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications