"லக்கா மாட்டிகிச்சி" பாடினாரே டோலக் ஜெகன்.. 14 வயது சிறுமியிடம் சில்மிஷம்.. சிறையில் அடைத்த போலீஸ்
சென்னை: ஓடும் ஆட்டோவில் கானா பாடகர் ஒருவர் சிறுமியை சில்மிஷம் செய்த நிலையில் அந்த சிறுமி ஆட்டோவிலிருந்து கீழே குதித்ததால பரபரபபு ஏற்பட்டுள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் தண்டையார்பேட்டையில் தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8ஆம் தேதி வழக்கம் போல் ஷேர் ஆட்டோவில் பள்ளி சென்றார்.
அப்போது அவருடன் பயணித்த இருவர் வீடியோ எடுத்து கானா பாடல்களை பாடி சிறுமியை கலாட்டா செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

சிறுமி
அந்த சிறுமி நகர்ந்து நகர்ந்து தள்ளி உட்கார்ந்தாலும் அவர்கள் இருவரும் சிறுமிக்கு அருகே நகர்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் தன் மீது அந்த இருவரின் கை பட்டதால் அச்சமடைந்த அந்த மாணவி ஆட்டோவிலிருந்து கீழே குதித்தார். உடனே டிரைவர் ஆட்டோவை நிறுத்தினார்.

மணி
அப்போது மணியும் டோலக் ஜெகனும் தப்பியோடினர். இதில் மாணவியின் மூக்கு, தாடை, இரண்டு கைகளிலும் காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். பின்னர் இருவரின் புகைப்படத்தை சிறுமியிடம் காண்பித்து இவர்கள் தானா என உறுதி செய்து கொண்டனர்.

வண்ணாரப்பேட்டை
இது தொடர்பாக வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கானா பாடகர் டோலக் ஜெகன் என்ற ஜெகதீஸ்வரையும் கொருக்குப்பேட்டையை சேர்ந்த மணியையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

இரங்கல் கூட்டம்
டோலக் ஜெகன் இரங்கல் கூட்டங்களிலும் கானா பாடல்களை பாடியுள்ளார். இவர் டோலக் வாசிக்க தெரிந்ததால் டோலக் ஜெகன் என அழைக்கப்பட்டார். வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க என்ற படத்தில் லக்கா மாட்டிக்கிச்சி என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் வாய்ப்பு கலைஞர் டிவியில் நடந்த நிகழ்ச்சியில கானா பாடியதை பார்த்துவிட்டு பாடகர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவாதான் சினிமாவில் பாட வாய்ப்பு கொடுத்தார். வடசென்னையில் இவர் பாடிய பாடலுக்காக வெற்றி மாறன் இவரை வெகுவாக பாராட்டியிருந்தார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications