"டிபன்பாக்ஸை" திடீர்னு திறந்த வர்கீஸ்.. அப்படியே அதிர்ந்து பார்த்த "தலைவர்".. என்னாச்சுன்னு பாருங்க
கூடலூர் நகராட்சி மன்ற கூட்டத்தில் டிபன்பாக்ஸ் உணவை சாப்பிட்டது சலசலப்பை தந்துள்ளது
சென்னை: நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி மன்ற கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.. இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.
பஞ்சாயத்து அமைப்பில் கவுன்சிலர்கள் தவிர்க்க முடியாதவர்கள்.. பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்களின் செயல்பாடுகளால்தான், அந்த பகுதியே செழுமையும் நன்மையும் அடைகிறது.
இதற்காகவே நகர்மன்ற கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன.. அதேசமயம், சமீபகாலமாகவே, நகர்மன்ற கூட்டங்களில் நிறைய பூசல்கள் வெடித்து கிளம்பி வருகின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும், ஏகப்பட்ட பரபரப்புகள் தமிழகத்தின் பல்வேறு நகர்மன்ற கூட்டங்களில் நடந்துள்ளது..

கவுன்சிலர்கள்
குளச்சல் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் துவங்கியது.. ஆனால், இதற்கு கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு தராததால் குளச்சல் நகராட்சி கூட்டம் பாதியிலேயே ஒத்தி வைக்கப்படுகிறது என்று அறிவித்தபடியே, தலைவர் நசீர் அங்கிருந்து வெளியேறினார்... அதேபோல, திருநெல்வேலி விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சாதாரண கூட்டம், தலைவர் செல்வசுரேஷ் தலைமையில் நடந்தது. கூட்டம் தொடங்கியவுடனேயே அதிமுக கவுன்சிலர்கள் கிறாஸ் இமாக்குலேட், வைகுண்டலட்சுமி ஆகியோர் தங்களது வார்டு பகுதிகளில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.. பிறகு, வெளிநடப்பும் செய்துவிட்டனர்..

லேட் மீட்டிங்
அதேபோல, பொள்ளாச்சி நகராட்சி கூட்டம் சியாமளா தலைமையில் நடந்தது.. அப்போது நகராட்சி பொறியாளர், கவுன்சிலர்களிடம் லஞ்சம் கேட்கிறார் என்று நகராட்சிக்கூட்டத்திலேயே பகிரங்கமாக குற்றஞ்சாட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.. அந்தவகையில், கூடலூரிலும் நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில், மாதாந்திர கூட்டம் நடந்தது.. ஆனால், ஒவ்வொரு முறையும் இந்த நகராட்சி கூட்டம் தாமதமாக நடப்பதாகவும், மதிய உணவு கூட வழங்கப்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.. இதை பற்றி வார்டு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஏற்கனவே, நகராட்சி தலைவரிடம் கேட்டுள்ளனர்..

டிபன்பாக்ஸ்
அதற்கு அவர், நிதி பற்றாக்குறையால் மதிய உணவு வழங்க முடியவில்லை என்று பதிலளித்ததாக தெரிகிறது.. இந்நிலையில், கூடலூர் 5வது வார்டு உறுப்பினர் வர்கீஸ் என்பவர், வீட்டில் இருந்தே சாப்பாட்டை கொண்டு வந்துவிட்டார்.. நகர்மன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே, டிபன்பாக்ஸை எடுத்து மேஜை மீது வைத்து, அதை திறந்து அவர் பாட்டுக்கு சாப்பிட ஆரம்பித்துவிட்டார்.. நகராட்சி தலைவர் இதை பார்த்து அதிர்ந்து போனார்.. ஆனால், வர்கீஸ் எதைப்பற்றியும் கவலைப்படாமல், "என்னால் பட்டினி கிடக்க முடியாது" என்று சொல்லிவிட்டு, சாப்பிட்டார்..

சோறு சோறு
அப்போது, அங்கிருந்த மற்ற வார்டு உறுப்பினர்கள், நகர்மன்ற தலைவரிடம் கேள்வி எழுப்பினார்கள்.. தாமதமாக எப்போதுமே கூட்டம் நடத்தப்படுவதால், மதிய உணவை கூட நேரத்துக்கு சாப்பிட முடிவதில்லை என்று வாக்குவாதம் செய்தனர்.. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதற்கு பலரும் திரண்டு வந்து ஆதரவு + எதிர்ப்புமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.. "அரசு கூட்டங்களை சரியான நேரத்துக்கு துவங்கி நடத்துவதில் இந்த தலைவர்களுக்கு என்ன பிரச்சனை என்று பலர் கேட்டு வருகிறார்கள்.. மேலும் சிலரோ, ஒருவேளை சாப்பாடு லேட்டானால் பொறுத்து கொள்ளக்கூடாதா? மக்கள் பிரச்சினையை பேசப் போனீங்களா இல்லை சோறு தின்ன போனீங்களா? என்றும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications