அந்தரங்க புகைப்படங்கள்.. மிரட்டலுக்கு மசியாத காதலி.. கத்தியை எடுத்து கழுத்தில் வைத்த காதலன்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் திருமணம் செய்ய மறுத்த காதலியின் கழுத்தில் கத்தியை வைத்த காதலன் கைது செய்யப்பட்டார்.
கொச்சி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் அந்தரங்க படங்களை எல்லாம் வெளியிட்டு விடுவதாக மிரட்டிய காதலன், காதலியின் கழுத்தில் கத்தியை வைத்து திருமணம் செய்யுமாறு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரை ஏற்று போலீசார் காதலனை கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவரும், கொச்சியை சேர்ந்த ஷாஜகான் என்பவரும் காதலித்து வந்திருக்கிறார்கள். இவர்கள் காதல் சுபமாகவே போயிருக்கிறது. காதலிக்கும் போது இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை நிறைய எடுத்திருக்கிறார்களாம்.
இந்நிலையில் இவர்களின் காதல் திருமணத்திற்கு இரு வீட்டின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. . இந்த சூழலில் ஷாஜகான் வேறு ஒரு பெண்ணுடனும் பழகி வந்தததாக கூறப்பபடுகிறது. இது சட்டக்கல்லூரி மாணவிக்கு ஒரு கட்டத்தில் தெரியவந்திருக்கிறது. இதனால் ஷாஜகானை திருமணம் செய்ய சட்டக்கல்லூரி மாணவி மறுத்ததாக கூறப்படுகிறது.
தன்னை திருமணம் செய்ய மறுத்தால் அந்தரங்க படங்களை எல்லாம் வெளியிட்டு விடுவதாக ஷாஜகான் மிரட்டியிருக்கிறார். ஆனால் அவர் அதற்கு அவர் மசியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து காதலியின் கழுத்தில் கத்தியை வைத்து திருமணம் செய்தே ஆகவேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் வீட்டில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் ஷாஜகானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்யாணம் செய்ய வேண்டி காதலியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications