அக்கா துப்பட்டாவில் ஊஞ்சலாடிய தம்பி.. கழுத்தை இறுக்கி.. மூச்சு திணறி.. பரிதாப மரணம்!
கழுத்தை இறுக்கிய துப்பட்டாவால், 10 வயது சிறுவன் மரணமடைந்தான்
கோவை: அக்கா துப்பட்டாவை கட்டி ஊஞ்சல்போல தொங்கி விளையாடி கொண்டிருந்த சிறுவன், அப்படியே தொங்கி உயிரை விட்டுவிட்டான்.
கோவை உக்கடம் ஜிஎம் நகரை சேர்ந்தவர் சதக்கத்துல்லா. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் காஜா உசேன்.. 10 வயதாகிறது.. ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

படு சுட்டியான பையன் இவன்.. நேற்று மாலை வீட்டில் இருந்த காஜா உசேன், தன்னுடைய அக்காளின் சுடிதார் துப்பட்டாவை ஜன்னலில் கட்டினான். பின்னர் கட்டிலில் இருந்து ஊஞ்சல் போல் தொங்கிக்கொண்டு விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டான்.
இதனால் துப்பட்டா அவனது கழுத்தில் இறுக்கிவிட்டது.. அடுத்த சில வினாடிகளில் மூச்சுத்திணறி காஜா மயங்கினான். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அலறிவிட்டனர்.. மயங்கி விழுந்த காஜாவை தூக்கி கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக சொல்லிவிட்டனர்.
இதை கேட்டு பெற்றோர் கதறி கதறி அழுதனர்.. அவ்வளவு நேரம் கண்ணெதிரே துருதுருன்னு விளையாடிட்டு இருந்த குழந்தை, இப்படி திடீர்ன்னு இறந்து போய்ட்டானே என்று அவனது உடலை கட்டிப்பிடித்து கொண்டு கதறி அழுதது, காண்போரை கலங்க வைத்துவிட்டது.
இந்த துயர சம்பவம் குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications