கம்பு ஊன்றி பாப்பம்பட்டிக்கு வந்த 103 வயது மூதாட்டி துளசியம்மாள்.. ஜனநாயக கடமையாற்றிய உணர்வு!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குள்பட்ட பாப்பம்பட்டியில் 103 வயது மூதாட்டி வாக்களித்தார்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. அத்துடன் 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கான லோக்சபா தேர்தலும் நடைபெற்று வருகிறது.

103 years old Thulasiammal cast her vote in Pappampatti

இது கடைசி கட்ட தேர்தல். மொத்தம் 7 கட்டங்களின் வாக்கு எண்ணிக்கை வரும் 23-ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் சூலூர் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் பாப்பம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு கம்பு ஊன்றியபடியே கூன் போட்டுக் கொண்டு ஒரு மூதாட்டி வந்தார்.

அவர் பெயர் துளசியம்மாள். அவருக்கு 103 வயது ஆகிறதாம். தள்ளாத வயதிலும் வாக்குச் சாவடிக்கு சென்று ஜனநாயக கடமையாற்றிய துளசியம்மாளை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+