கோவையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் எடுத்த முடிவு.. மாவட்ட கலெக்டருக்கு மிகப்பெரிய ட்விஸ்ட்
கோவை: கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு மொத்தம் 3563 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு 4 பேர் வீதம் மொத்தம் 14,252 பேர் பணியில் ஈடுபட வேண்டும். இதற்கு தேவையான பணியாளர்களை அதாவது அரசு ஊழியர்களை கோவை மாவட்டத்தில் இருந்து பிரதானமாகவும், மற்ற ஊர்களில் இருந்து கணிசமானோரையும் தேர்தல் பணிக்கு கொண்டு வர வேண்டியது கோவை மாவட்ட கலெக்டரின் பொறுப்பு.. ஆனால் கோவை கலெக்டரிடம் தேர்தல் பணியில் விலக்கு கேட்டு 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் விண்ணப்பத்திருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் (வடக்கு), தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் (தெற்கு), சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி) ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 3,563 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.

ஒரு வாக்குச்சாவடிக்கு 4 பேர் வீதம் பணி செய்ய இருக்கிறார்கள். இவர்களுக்கும், 10 சதவீத ரிசர்வ் ஊழியர்களுக்கும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி நியமன ஆணை அனுப்பப்பட்டது. கல்வி, வருவாய், பொதுப்பணி, மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி உட்பட பல்வேறு துறைகளில் இருந்து அரசு ஊழியர்கள் பணி நியமன ஆணை பெற்றனர். பணி நியமன ஆணை பெற்றவர்களுக்கு என்ன பதவி என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் உடல் நலக்குறைவு மற்றும் இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் பணியில் இருந்து விலக்கு கேட்டு விண்ணப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். மருத்துவ சான்றிதழ்களுடன் அரசு ஊழியர்கள் குவிந்து மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
தேர்தல் பணி என்பது ஜனநாயகத்தின் மிக முக்கியக் கடமை. ஆனால், 2,000 பேர் ஒரே நேரத்தில் 'உடல் நலக்குறைவு' என்று விலக்கு கேட்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இது நிஜமான உடல்நலப் பிரச்சனையா என்றால் அதில் ஓரளவே உண்மை உள்ளது. ஏனினும் தேர்தல் பணியில் இருக்கும் கடுமையான வேலைப்பளு மற்றும் பொறுப்புகளுக்குப் பயந்து விலக நினைப்பதாக உண்மையில் பார்க்கப்படுகிறது. இதற்கான காரணங்களை பார்ப்போம்..
தேர்தல் பணி என்பது ஒரு சாதாரண அரசுப் பணியை விட பலமடங்கு மன அழுத்தமும் உடல் உழைப்பும் கொண்டது ஆகும். ஏனெனில் தேர்தல் நாளில் விடியற்காலை 5 மணிக்கே வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டியது. வாக்குப்பதிவு முடிந்து, இயந்திரங்களைச் சீல் வைத்து, மண்டல அலுவலகத்தில் ஒப்படைக்க நள்ளிரவு 2 மணி அல்லது அதற்கு மேல் ஆகிவிடும். இது இடைவிடாத 20 மணிநேர வேலை ஆகும்.
அதேபோல் பல கிராமப்புற வாக்குச்சாவடிகளில் முறையான தங்கும் வசதி, கழிப்பறை வசதி அல்லது தரமான உணவு இருப்பதில்லை. குறிப்பாக, நீரிழிவு நோய் உள்ள ஊழியர்கள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அங்குள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் தான் அவர்களை கவனிக்க வேண்டிய நிலை வருகிறது.
தூரமான இடங்களுக்குப் போடப்படும் பணி, சொந்த வாகனங்களில் செல்வதற்கான செலவு போன்றவை ஊழியர்களுக்குச் சுமையாக மாறுகிறது. அதேபோல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு சிறு தவறு நடந்தாலும் அல்லது அரசியல் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டாலும், அதற்குத் தேர்தல் அதிகாரிதான் பதில் சொல்ல வேண்டும். இந்தப் பயமும் பலரை பணி வேண்டாம் என்று ஓடவைப்பதாக கூறப்படுகிறது.
-
தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி வழக்கு.. குற்றவாளிகள் மீது பாய்ந்த ஆக்ஷன்! பரபரப்பான கோவை! -
கோவை சிறுமி விவகாரம்! வாழறதுக்கே தகுதி இல்லாதவர்கள்! எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications