தாலி கயிற்றின் நிறம் கூட மாறலை.. உடல் முழுவதும் மஞ்சள் பூசி.. இளம்பெண்ணை கொன்று தற்கொலை என நாடகம்
கோவை: கோவையில் காதலித்து திருமணம் செய்த பெண்ணை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை ஆலாந்துறை அருகே உள்ள மத்துவராயபுரம் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சஞ்சய் (20). இவர் பேரூர் பகுதியில் உள்ள தமிழ் கல்லூரியில் பி.காம் சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் தன்னுடன் படித்து வந்த செல்வபுரம் பகுதியை சேர்ந்த ரமணி (20) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்ததை அடுத்து எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து கடந்த மே மாதம் 6ஆம் தேதி சஞ்சயும் ரமணியும் வீட்டை விட்டு வெளியேறி வேளாங்கண்ணியில் திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மத்துவராயபுரம் குறிஞ்சி நகரில் உள்ள சஞ்சயின் அப்பா அம்மா இவர்களது காதலை ஏற்றதால் புதுமண தம்பதி இருவரும் அங்கு தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி ரமணி சாணி பவுடர் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக ஆலாந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரமணி ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மருத்துவமனையில் இருந்து காருண்யா நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ரமணியின் தந்தை கருப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் ஆர்டிஓ விசாரணைக்கு பின்னர் ரமணியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ரமணியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் சஞ்சயின் குடும்பத்தினர் அவரை கொன்றதாகவும் ரமணியின் பெற்றோர் குற்றம்சாட்டினர். இதையடுத்து போலீஸார் ரமணியின் கணவர் சஞ்சய், மாமனார் லட்சுமணன், மாமியார் பக்ருநிஷா ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது மூன்று பேருமே முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்தனர். இதனால் காவல் துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் விசாரணையில் சஞ்சய் அடிக்கடி செல்போனில் அவருடன் படித்த கல்லூரி மாணவியுடன் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதை ரமணி தட்டிகேட்டு இனி அந்த பெண்ணுடன் பேச வேண்டாம் என கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே கடந்த 29ஆம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கோபத்தில் சஞ்சய், ரமணியை அடித்து கழுத்து பிடித்துள்ளார். மேலும் கீழே தள்ளி அந்த பெண்ணின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்ததாகவும் தெரிகிறது. இதனால் ரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து சஞ்சய் தனது தாய், தந்தையிடம் கூறியுள்ளார்.

இதனால் கொலை மறைப்பதற்காக அந்த பெண்ணின் உடலில் இருந்த ஆடைகளை அகற்றி சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சளை உடல் முழுவதும் பூசி குளிக்க வைத்து ஆடைகளை அகற்றி சாணிப்பவுடரை குடித்து இறந்தது போல் செட்டப் செய்துள்ளனர். அக்கம்பக்கத்தினரை நம்ப வைக்க புளியை கரைத்து ஊற்றி, உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்வது போல் நாடகமாடியது தெரியவந்தது.
இதையடுத்து சஞ்சய் தனது மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். 20 நாட்களில் ஆசையாக திருமணம் செய்து கொண்ட காதலியை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்












Click it and Unblock the Notifications