22 சவரன் தங்க நகை, 8 மோதிரம்.. வாக்கு கேட்டு வந்த கோவை ரியல் எஸ்டேட் "பிசினஸ்மேன்".. திகைத்த மக்கள்
கோவை: இந்தியாவில் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டாலே, அரசியல் களம் புதுமையான மற்றும் வியக்கத்தக்க நிகழ்வுகளால் களைகட்ட தொடங்கிவிடும். வேட்பாளர்கள் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கவும், தங்கள் சின்னங்களையும் வாக்குறுதிகளையும் மக்களிடம் ஆழமாக பதிய வைக்கவும் பல்வேறு நூதன முறைகளைக் கையாள்வது வழக்கம். அப்படியான நூதனங்கள்தான் வாக்காளர்களை தற்போதைய தேர்தலிலும் கவர்ந்து வருகிறது.
வெறும் மேடைப் பேச்சுகளோடும், துண்டுப் பிரசுரங்களோடும் நின்றுவிடாமல், மக்களின் அன்றாட வாழ்வியலோடு கலந்த செயல்களைச் செய்து காட்டி, தங்களை ஒரு "சாமான்ய மனிதனாக" முன்னிலைப்படுத்திக் கொள்வதில் வேட்பாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

நூதன வாக்கு சேகரிப்பு
இத்தகைய வித்தியாசமான அணுகுமுறைகள் வாக்காளர்கள் மத்தியில் ஒருவித ஈர்ப்பையும், அதே சமயம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களையும் உருவாக்கித் தேர்தல் களத்தையே சுவாரஸ்யமாக்குகின்றன.
அந்த வகையில், காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் சோமசுந்தரம், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிக விசித்திரமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ரியல் எஸ்டேட் பிசினஸ்மேன்
அவர் ஒரு கையில் எரிவாயு சிலிண்டரையும், இன்னொரு கையில் பாலத்தின் மாதிரி வடிவத்தையும் ஏந்தியபடி வீதி வீதியாக சென்று வாக்கு கேட்டார். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் தொகுதியில் தீர்க்கப்பட வேண்டிய கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைக் குறியீடாக உணர்த்தும் வகையில் இந்த நூதனப் பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டார்.
அமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களின் பிரச்சாரங்களுக்கு மத்தியில், ஒரு வேட்பாளர் இது போன்ற பொருட்களைச் சுமந்து கொண்டு செல்வது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், மற்ற வேட்பாளர்களும் சளைக்காமல் களத்தில் இறங்கி வினோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், அப்பகுதி விவசாயிகளின் நிலையையும் நீர் நிலைகளின் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் திடீரென கிணற்றில் குதித்து நீந்தியபடி வாக்கு சேகரித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
ஆடுகளை மேய்த்து கொண்டே...
அதேபோல, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஒருவர் கிராமப்புற மக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்து, சாலையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டே பொதுமக்களிடம் வாக்கு கேட்டுச் சென்றார். இத்தகைய செயல்கள் தேர்தல் நேரத்தில் பரபரப்பைத் தேடித் தருவதோடு மட்டுமல்லாமல், வேட்பாளர்கள் தங்களை எளிய மக்களோடு நெருக்கமானவர்களாகக் காட்டிக் கொள்ளும் ஒரு யுக்தியாகவும் பார்க்கப்படுகிறது.
இதோ கோவையிலும் ஒரு வினோதம் நேற்று நடந்தது.. கோவை சிங்காநல்லூர் தொகுதியில் ஏற்கனவே 6 சுயேச்சை வேட்பாளர்கள் களம் கண்டுள்ள நிலையில், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான ரியல் எஸ்டேட் அதிபர் தாஹிர் உசேன் என்பவரின் வேட்புமனு தாக்கல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
8 மோதிரங்கள், பிரேஸ்லெட்
மண்டல அலுவலகத்திற்குத் தனது ஆதரவாளர்களுடன் பட்டு வேட்டி, சட்டை மற்றும் துண்டு அணிந்து ஒரு புது மாப்பிள்ளை போன்ற தோற்றத்தில் வந்த அவர், தனது 8 விரல்களில் பிரம்மாண்ட மோதிரங்கள், கையில் பிரேஸ்லெட் மற்றும் கழுத்தில் கனமான தங்கச் சங்கிலி என மொத்தம் 22 சவரன் நகைகளை அணிந்து வந்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தார்.
தனது பிரமாணப் பத்திரத்தில் அரை கிலோ தங்கம், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் தனக்கு இருப்பதாக அவர் முறைப்படி குறிப்பிட்டுள்ளார்.
வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தாஹிர் உசேன், சமூக வலைதளங்களில் தன்னை 50,000 பேர் பின்தொடர்வதாகவும், சுயேச்சையாக போட்டியிடுபவர்களின் வலிமையை நிரூபிக்கவே இந்த அலங்காரத்துடன் வந்ததாகவும் தெரிவித்தார்.
22 சவரன் தங்க நகைகள்
தனது சொந்தத் தொகுதியான சிங்காநல்லூரில் நிலவும் மோசமான சாலைகள், சாக்கடைப் பிரச்சனைகள் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஆகியவற்றை முன்வைத்துத் தான் பிரச்சாரம் செய்யப் போவதாகக் கூறிய அவர், தேர்தலில் சுமார் 5,000 முதல் 10,000 வாக்குகள் கிடைத்தாலே அது ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படும் என்றார். ஒரு சுயேச்சை வேட்பாளராக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இத்தனை நகைகளை அணிந்து வந்ததாக அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
எனினும், சாமான்ய மக்களின் அடிப்படைத் தேவைகளை முன்னிறுத்துவதை விட, இது போன்ற நூதனச் செயல்கள் மூலம் சமூக வலைதளங்களில் கவனத்தைப் பெறுவதையே இன்றைய வேட்பாளர்கள் வெற்றிக்கான குறுக்குவழியாகக் கருதுகிறார்கள்.. இத்தகைய வினோதமும், ஆடம்பாரமான வாக்கு சேகரிப்பு முறைகளும் தேர்தல் களத்தில் வாக்காளர்களை ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைத்தாலும், அவை வாக்குகளாக மாறுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து
பார்ப்போம்...!!
-
செங்கோட்டையனே நொந்து போயிட்டாரோ.. திடீர் திடீர்னு ரத்தாகும் விஜய் பயணங்கள்.. தள்ளாடுதா தவெக.? -
21 தொகுதிகளில் உதயசூரியனும் இல்லை.. இரட்டை இலையும் இல்லை.. தட்டி தூக்குகிறார்களா விஜய், சீமான்? -
தொடர்ந்து சொதப்பும் விஜய்.. அடுத்தடுத்து பரப்புரை ரத்து! காரணங்களை பாருங்க! -
ஆடு 1000.. எருமை 55,000, மனுஷன் விலை இவ்வளவுதானா? சீமான் வெளியிட்ட அதிர்ச்சி கணக்கு! #Election2026 -
பிரபல அரசியல்வாதி கரூரில் அரங்கேற்றிய B பிளான்.. தியாகராஜன் மனுவில் அந்த 1 பத்திரம்? ஆடிப்போன அறிவாலயம் -
Postal Voting: யாரெல்லாம் தபால் வாக்கு அளிக்கலாம்.. தபால் வாக்களிப்பது எப்படி.. இதோ முழு விவரம் -
“இதைச் சொல்லி பிரச்சாரம் செய்வீர்களா?” தமிழகம் வரும் பாஜக தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்! -
பொன்னேரியில் அந்த 1 நிமிடம்.. பேசிட்டே கதறி கதறி கண்ணீர் விட்ட பலராமனுக்கு தண்ணீர்.. ஒன்னும் புரியல -
கோவை ஸ்டார் ஓட்டலில் காஸ்ட்லி விருந்து.. செந்தில் பாலாஜியை வீழ்த்த வேலுமணி வீசிய பவர்ஃபுல் ஸ்ட்ரோக் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு?












Click it and Unblock the Notifications