காதலியின் நிர்வாண போட்டோவை... பெண்ணின் அப்பாவுக்கே அனுப்பி வைத்த இளைஞர்.. கோவையில் பரபரப்பு
பெண்ணை மிரட்டிய இளைஞரை கோவை போலீசார் கைது செய்தனர்
கோவை: காதலி அனுப்பிய நிர்வாண போட்டோவை, அந்த பெண்ணின் அப்பாவுக்கே அனுப்பு வைத்துள்ளார் ஒரு இளைஞர்.. அந்த இளைஞருக்கு வெறும் 22 வயசுதான் ஆகிறது.
கோவை குனியமுத்தூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஒசூரில் உள்ள ஒரு காலேஜில் பிஇ 3ம் வருடம் படித்து வந்தார்.. அதே காலேஜில் தூத்துக்குடியை சேர்ந்த தேவேஷ்வர் என்பவரும் படித்து வந்தார்.

அவரும் 3ம் வருடம்தான்.. இருவருக்குமே 22 வயசாகிறது. ரெண்டு பேருமே அங்கிருந்த ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தனர்.
நாளடைவில் இருவருக்கும் காதல் மலர்ந்தது.. நிறைய இடங்களுக்கு 2 பேரும் சுற்றி வந்துள்ளதாகவும் தெரிகிறது.. அப்போது செல்பிக்களையும் எடுத்து கொண்டுள்ளனர். இந்த சமயத்தில் லாக்டவுன் போட்டுவிடவும், காலேஜ் மூடப்பட்டது.. அதனால் இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
ஆனாலும் வீடியோ காலில் இருவரும் பேசி வந்தனர். மகள் எப்ப பார்த்தாலும் போனிலேயே இருக்கவும், மகளை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மாணவியும் காதலனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காதலன், நீ நிர்வாணமாக இருக்கும் போட்டோக்கள் என்கிட்டே இருக்கு.. அதை சோஷியல் மீடியாவில் போட்டுவிடுவேன்.. அதனால் என்னை ஏமாற்றணும்னு நினைக்காதே என்று மிரட்டி உள்ளார்.
ஆனாலும் மாணவி அந்த மிரட்டலை கண்டுகொள்ளவே இல்லை.. அப்பா சொல்மீறி காதலனிடம் பேசவும் இல்லை.. இதனால் கோபத்தில் இருந்த காதலன் தேவேஷ்வர், காதலியின் நிர்வாண போட்டோக்களை நிஜமாகவே அவரது அப்பாவுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துவிட்டார்..
மகளின் போட்டோக்களை கண்டு மிரண்டு போன பெற்றோர், அதுகுறித்து விசாரித்தனர். அப்போதுதான், ஹாஸ்டலில் குளிக்கும்போது, அந்த வீடியோவை மாணவி எடுத்துள்ளார்.. அவருக்கு தெரியாமல் காதலன் அவைகளை தன்னுடைய செல்போனுக்கு மாற்றி உள்ளார்.
இதை வைத்து கொண்டுதான் இவ்வளவு நாள் மிரட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதற்கு பிறகு கல்யாணம் செய்ய சம்மதம், என்று காதலனிடம் சாமர்த்தியமாக பேசி கோவைக்கு வரவழைத்தார் அந்த மாணவி.. அதற்கு முன்னதாகவே குனியமுத்தூர் போலீசில் இளைஞர் பற்றி புகார் தந்துவிடவும், அங்கே போலீசார் மறைந்திருந்து காத்திருந்தனர்.
கல்யாண ஆசையில் தேவேஷ்வர் அங்கு ஆசையாக வந்ததுமே.. விரைந்து சென்று போலீசார் அவரை கைது செய்தனர்..- இப்போது இளைஞன் மீது பெண்கள் வன்கொடுமை மற்றும் ஆபாச படங்கள் அனுப்பி மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
