மஞ்ச தாலி 25.. உல்லாச வாழ்க்கையும், சொத்துக்களும்.. 26வது கல்யாணத்துக்கு ரெடியான பெண்.. தலை சுத்துது

Subscribe to Oneindia Tamil

கோவை: மேட்ரிமோனியல் உட்பட பல்வேறு திருமண இணையதளங்களில் திருமண மோசடிகள் பெருகி வருகின்றன.. இதில், இளம்பெண்களே நேரடியாக இறங்கி, வசதியுள்ளவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை திருமணம் செய்து, பணம், நகைகளை மோசடியும் செய்துவிடுவது அதிகரித்து வருகிறது. இது சம்பந்தமான புகார்கள் போலீசுக்கு சென்றவண்ணம் உள்ள நிலையில், மோசடி பேர்வழிகளை காவல்துறையும் கைது செய்து வருகிறார்கள். கோவையில் நேற்றுதான் ஒரு பெண் கைதானார், இப்போது ராஜஸ்தானில் மற்றொரு பெண் கைதாகியிருக்கிறார். என்ன நடந்தது?

கோவையை சேர்ந்த 47 வயது மடோனா என்ற பெண், மனைவியை இழந்து தனியே வசிக்கும் ஆண்களுக்கு , அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு மட்டுமே குறி வைத்து ஏமாற்றி வந்துள்ளார்..

ராஜஸ்தான் அனுராதா

சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களிடம் நெருங்கி பழகி, அவர்களையே திருமணம் செய்து கொண்டு நகை, பணம், சொத்துக்களை அபகரித்துவிடுவாராம். பல ஆண்களை ஏமாற்றிய மடோனா நேற்று கைதாகி உள்ளார்.

இன்று ராஜஸ்தானில் அனுராதா ஹேக் என்ற பெண் பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளார். இந்த பெண்ணும், மேட்ரிமோனியல், திருமண புரோக்கர்களை அணுகி, வசதியான ஆண்களுக்கு வலையை விரிப்பவராம்..

25 கணவன்கள்

தன்னை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கும் ஆண்கள் என்றால், உடனே அவர்களுடன் சட்டப்படி பதிவு திருமணமும் செய்து கொள்வாராம். பதிவு திருமணம் செய்வதால், யாருக்கும் அனுராதா மீது சந்தேகம் வருவதில்லை.. இப்படி இதுவரை 25 பேரை திருமணம் செய்துள்ளார்.. அதுவும் 7 மாதங்களில் 25 கணவன்கள்..!!

திருமணம் முடிந்து சில நாட்களில் நகை, பணம், சொத்துக்களை அபகரித்து, அதற்கு பிறகு அந்த வீட்டிலிருந்து கிளம்பி சென்றுவிடுவாராம். இப்படி பலரும் ஏமாந்துபோன நிலையில், சவாய் மாதோப்பூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு சர்மா என்ற நபர் மட்டும் போலீசுக்கு சென்று புகார் தந்துள்ளார்.. இந்த புகாரை விசாரிக்க சென்றபோதுதான, அனுராதாவின் அனைத்து தில்லாலங்கடி வேலைகளும் வெளிச்சத்துக்கு வந்தன.

அனுராதா வாக்குமூலம்

போலீசார் அனுராதாவை தேடி செல்வதற்குள், போபாலில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை மாப்பிள்ளையாக காட்டி திருமணம் செய்ய முயன்று கொண்டிருந்தாராம்.. ஆனால், போலீசார் அனுராதாவை சுற்றிவளைத்து கைது செய்துவிட்டனர்..

பிறகு அனுராதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் திருமண மோசடி செய்துள்ளதாக ஒப்புக் கொண்டார்.. இப்போது தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. 26வதாக வாக்கப்பட தயாராக இருந்த மாப்பிள்ளை, தற்போது அதிர்ச்சியில் உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+