"நீல" நிறமா மாறப் போகுது நம்ம கோவை.. மக்களுக்கு குஷியோ குஷி.. உக்கடம், காந்திபுரம் இனி ஜொலிக்கும்
கோவை: சென்னை, மதுரையைத் தொடர்ந்து அல்ட்ரா மாடல் ஸ்டைல் கொண்ட 25 புதிய லோ ப்ளோர் பஸ் எனும் தாழ்தளப் பேருந்துகள் கோவையில் விரைவில் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு இருக்கை வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
கோவை மாவட்டத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, மருத்துவம் என அனைத்து வசதிகளையும் கொண்டதாக கோவை மாவட்டம் விளங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வசதிகள் சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூரில் உள்ளன.

கோவையில் பொதுமக்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் பேருந்துகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிலும், வார இறுதி நாள்களிலும், தொடர் விடுமுறை நாள்களிலும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் முன்பைவிட அதிக அளவில் அரசு விரைவுப் பேருந்துகளை பயன்படுத்துவதால், பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழக அரசு புதிய பேருந்துகள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஏராளமான பேருந்துகளும் வாங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் குறுகிய சாலைகளில் பயணிக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களால் 6 ஆண்டுகளுக்கு முன்பு, தாழ்தளப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டன. ஆனால், மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில் மீண்டும் தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
கோவையிலும் இதே கோரிக்கை நீண்ட நாள்களாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தளப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் முதல்கட்டமாக 58 பேருந்துகளை கடந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இந்த தாழ்தள பேருந்துகளில் இறங்கு தளத்தின் உயரத்தை 60 மி.மீ. குறைத்து (kneeling) பயணிகள் ஏறிய பிறகு, பழைய உயரத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது.
அதேபோல, மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி, இறங்குவதற்கு சாய்தள வசதி, மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி இறங்குவதற்கு சாய்தள வசதி என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கோவைக்கு 100 தாழ்தள பேருந்துகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில், 24 பேருந்துகள் முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளன.
கோவையில் எந்தெந்தப் பகுதிகளில் இந்த தாழ்தள சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்பது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 24 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகள் உக்கடம், காந்திபுரத்தில் இருந்கு சோமனூர், வாளையாறு, அன்னூர், காரமடை, வேலாந்தாவளம், சரவணம்பட்டி, வெள்ளக்கிணறு, சின்ன மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன.
தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளின் படிக்கட்டுகளைவிட, தாழ்தள சொகுசுப் பேருந்துகளின் படிக்கட்டுகள் மிகவும் உயரம் குறைவாக இருக்கும். இதன் மூலமாக மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் மிகவும் எளிதாக பேருந்துகளில் ஏறி இறங்கலாம். இந்த வசதி பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications