இ-பாஸ் சிக்கலுக்கு தீர்வு..மலைகளின் அரசி ஊட்டிக்கு போறீங்களா? கம்மி பட்ஜெட்.. அரசின் அசத்தல் ஆஃபர்!
கோவை: தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஊட்டி கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் மக்கள் பயன்பாட்டுக்காக கோவையிலிருந்து 25 சிறப்பு பேருந்துகள் நாளை முதல் உதகைக்கு இயக்கப்பட இருக்கிறது.
கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்திருக்கும் நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது தொடர் விடுமுறையும் வருவதால் பணி புரியும் நபர்கள் கூட கோடை வாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ,சேலம் மாவட்டம் ஏற்காடு போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருக்கிறது.
உதகை: இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. குறிப்பாக மலைகளின் அரசியான உதகைக்கு செல்வதற்கு மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அங்கு ஆண்டு தோறும் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக கோடை விழாவும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடை விழா 10ஆம் தேதி தொடங்குகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் தொடங்கும் இந்த விழா இருபதாம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடக்க இருக்கிறது.
மலர்க் கண்காட்சி: பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை கண்டு ரசிப்பதற்காக இந்தியா முழுவதும் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஊட்டிக்கு வருவார்கள். மேலும் சொந்த மற்றும் வாடை வாகனங்கள் மட்டுமல்லாது பட்ஜெட் காரணமாக அரசு பேருந்துகளில் பயணித்து ஊட்டிக்கு வரவும் சுற்றுலா பயணிகள் அனைவரும் விரும்புகின்றனர். தற்போதைய சூழலில் கோவையில் இருந்தே உதகைக்கு பேருந்துகளில் வர உள்ளனர்.
இ-பாஸ்: இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு காரணமாக வரும் ஏழாம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நீலகிரி ஊட்டிக்கு வருவோர் இ-பாஸ் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களை தவிர்த்து விட்டு அரசு பேருந்துகளில் பயணிக்க வாய்ப்பு உள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த சீசனுக்காக கோவையில் இருந்து ஊட்டிக்கு நாளை முதல் 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
சிறப்பு பேருந்துகள்: கோவையிலிருந்து ஊட்டி மற்றும் கூடலூர் வரை அரசு பேருந்துகள் 80 என்ற எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. தற்போது ஊட்டியில் சீசன் மற்றும் மலர் கண்காட்சியை காண்பதற்காக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நாளை முதல் கோவையிலிருந்து 25 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாகவும் எனவே சுற்றுலாப் பயணிகள் அதிக பட்ஜெட் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு பேருந்து சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications