கோவை பேனர் விபத்தில் 3 பேர் பலியான சோகம்.. ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு
கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே ராட்சத விளம்பர பலகையில் விளம்பர பேனர் வைக்கும் போது இரும்பு தூண்கள் சரிந்து விழுந்தது. இதில் பேனர் பொருத்தும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே கோவை - அவிநாசி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு ராமசாமி என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது. சுமார் 60 அடி உயரத்தில் இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த விளம்பர பலகையில் நேற்று விளம்பர பேனர் பொருத்தும் பணி நடைபெற்று கொண்டு இருந்தது. சேலத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் ஒப்பந்தம் எடுத்து வந்தாக சொல்லப்படுகிறது. இந்த ராட்சத விளம்பர பலகையில், விளம்பரபேனரை பொருத்தும் பணியில் 7 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த பணிகள் நடைபெற்று கொண்டிந்த போது அங்கு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் இரும்பு தூண்கள் அசைந்துள்ளது. இதனால், பேனர் மட்டும் மாட்டிக் கொண்டு இருந்த தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். உடனடியாக இறங்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. காற்றின் வேகமும் தொழிலாளர்கள் ஒரே பக்கமாக இறங்கியதாலும் 60 அடி உயரத்தில் பிரம்மண்ட உயரத்தில் இருந்த அந்த இரும்பு தூண் சரிய தொடங்கியது.
தொடர்ந்து பாரம் தாங்காமல் இரும்பு தூண்கள் சாய்ந்து தரையில் விழுந்தன. அப்போது தொழிலாளர்களும் இதில் சிக்கிக் கொண்டனர். இரும்பு தூண்களின் இடிபாடுகளுக்குள் சிக்கி சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த குமார் (வயது40), சேகர் ( வயது 45), சேலத்தைச் சேர்ந்த குணசேகரன் (வயது 52) ஆகிய 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர்.
மேலும் இடிபாடுகளில் சிக்கி அருண்குமார் (40), சண்முகசுந்தரம் (35) ஆகிய 2 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கருமத்தம்பட்டி போலீஸ் அதிகாரிகள் விபத்து நடைபெற்ற இடத்தை வந்து பார்வையிட்டனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக பேனர் பொருத்தும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் பழனிசாமியை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேர் மீது கோவை கருமத்தம்பட்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒப்பந்ததாரர் பாலாஜி, துணை ஒப்பந்ததாரர் பழனிசாமி, நில உரிமையாளர் ராமசாமி ஆகியோர் மீது போலீசார் ஐபிசி 302 மற்றும் 308 ஆகிய பிரிவுகளின் கீழ் கொலைவழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications