ஒரே நாளில் கோவையில் குவியும் 4 விஐபிக்கள்! போலீஸார் குவிப்பு! பரபரக்கும் தொழில் நகரம்

Subscribe to Oneindia Tamil

கோவை: ஒரே நாளில் கோவைக்கு 4 விஐபிக்கள் வருகை தரவுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 25-ஆம் தேதி நால்வரும் வருவதால் கோவையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

coimbatore

அரசியல் கட்சியினர், விஐபிக்கள் என யார் எங்கும் வந்தாலும் அவர்களுக்குரிய பாதுகாப்பை தருவது அந்த நாடு, அல்லது மாநிலம் அல்லது மாவட்டத்தின் கடமையாகும்.

ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் ப்ரோட்டோகாலின்படி பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரே ஊருக்கு 4 விஐபிகள் வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

ஊட்டியில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் பங்கேற்கிறார். வரும் 25ஆம் தேதி டெல்லியில் இருந்து தனிவிமானத்தில் மதியம் 2.30 மணிக்கு தனி விமானத்தில் கோவை வருகிறார்.

அங்கிருந்து ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் பகுதிக்கு இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் செல்கிறார். அங்கு துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து 26ஆம் தேதி ஊட்டி தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டாவுக்கு செல்கிறார்.

பின்னர் 27ஆம் தேதி ஹெலிகாப்டரில் கோவை விமான நிலையத்திற்கு வரும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், காலை 10 மணிக்கு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார்.

காலை 10.30 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அது போல் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் கோவை வருகிறார். துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்ட ஆளுநருக்கு அதிகாரமில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் அவர் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

அது போல் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி கோவைக்கு வருகிறார். கோவையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அவற்றை உதயநிதி தொடங்கி வைக்கிறார். அவர் மேலும் வனத்துறை அலுவலகத்தில் நடக்கும் பெத்திக்குட்டையில் வனவிலங்குகள் மறுவாழ்வு மையக் கட்டடத்தை தொடங்கி வைத்து, வனத்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள நவீன ஆயுதங்களை உதயநிதி பார்வையிடுகிறார்.

அன்று மாலை ஆர்.எஸ்.புரத்தில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் உதயநிதி பங்கேற்கிறார். கோவை- சத்தி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் வரும் 26,27 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைவர் விஜய் கோவை வருகிறார்.

இவ்வாறு வரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் 4 விஐபிக்கள் கோவை வருகிறார்கள். இதனால் கோவையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவை மாநகரமே பரபரப்பாக இயங்கி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+