பிரபல தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து 5 தொழிலாளர்கள் பலி.. கோவையில் சோகம்!
கோவை: கோவையில் பிரபல தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலியாகினர். இது தொடர்பாக கட்டுமான பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் சுகுணாபுரம் அருகே கிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரி வளாகம் உள்ளது. இங்கு கிருஷ்ணா கலைக் கல்லூரி மற்றும் விடுதிகளும் இருக்கின்றது. இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதி அருகே 5 அடி உயரத்தில் மதில் சுவர் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கருங்கற்களால் இந்த மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த மதில் சுவர் அருகே தற்போது புதிதாக மதில் சுவர் கட்டும் பணி நடந்து வந்தது.

அதாவது பழைய மதில் சுவர் அருகே புதியதாக மதில் சுவர் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்டது. தொடர்ந்து அதில் மதில் சுவர் கட்டும் பணி நடந்து வந்தது. இந்த கட்டுமான பணியில் மேற்கு வங்க மாநிலத்தை சேந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாலை 5.30 மணியளவில் அங்கு ஏற்கனவே கட்டப்பட்டிருந்த கருங்கற்களால் ஆன மதில் சுவரின் அஸ்திவாரம் வலுவிழந்து சுமார் 100 அடி நீளத்துக்கு இடிந்து விழுந்தது.
யாரும் எதிர்பாரத நேரத்தில் திடீரென மதில் சுவர் இடிந்து விழுந்ததால், அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். நொடிப்பொழுதில் இந்த பயங்கர சம்பவம் நடந்து முடிந்தது. இதையடுத்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். இதில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடததிலேயே பரிதாபமாக உயிழந்தனர். இருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பரூன் கோஷ் என்ற தொழிலாளியும் உயிரிழந்தார். இதனால் , சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர் சீனிவாசன் என்பவர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடைபெற்ற இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கூறியதாவது: - கட்டுமான இடங்களில் விபத்துக்கான வாய்ப்புகள் எந்த நேரத்திலும் வரலாம். அதற்கான காப்பீடு வாங்கியிருக்காறார்களா? என்பது விசாரணையில் தெரியும். விதி மீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications