"தனிமை".. 45 வயசானாலும் மறக்க முடியாத காதலனின் முகம்.. சுடுகாட்டுக்கே அலறி ஓடி.. அதிர வைத்த பெண்!
கோவையில் 45 வயது பெண் தற்கொலை செய்து கொண்டார்
கோவை: கள்ளக்காதலன் இறந்துவிடவும், அந்த சோகம் தாங்காமல் சுடுகாட்டுக்கே ஓடிசென்று மிரள வைத்தும், இறுதியில் தற்கொலை செய்தும் கொண்டுள்ளார் ஒரு பெண்!
நமக்குதான் அதன் பெயர் கள்ளக்காதல்.. முறையற்று காதல் செய்வோருக்கு அதன் பெயர் காதல்தான்.. எத்தனை வயதானாலும் அதன் பெயர் காதல் தான்.. யார் தடுத்தாலும், என்ன சொன்னாலும் அதன் பெயர் காதல்தான்.
இந்த பெண்ணுக்கு வயது 45 ஆகிறது.. பெயர் ஜெகஜோதி.. 45 வயதாகிறது.. கோவை மாவட்டம் சூலூரில் உள்ள கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர்.. கல்யாணமாகிவிட்டது.. கணவன் பெயர் முருகன்.

பிரச்சனை
2 பிள்ளைகள் இருக்கிறார்கள்.. ஆனால், கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, பிரிந்து பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.. இவர்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் வசிக்கும் இளைஞருக்கு வயது 29 ஆகிறது.. அவர் பெயர் துரைக்கண்ணு.. தனியாக வசித்து வந்த ஜெகஜோதிக்கு, அடிக்கடி சின்ன சின்ன உதவிகளை செய்து தந்தார் துரைக்கண்ணு.. இந்த பழக்கம் நட்பானது.. நட்பு காதலானது.. காதல் நெருக்கமானது!

பைக் விபத்து
இதில் துரைக்கண்ணு என்றால் ஜெகஜோதிக்கு கொள்ளை பிரியமாம்.. இந்த நிலையில், துரைக்கண்ணு கடந்த செவ்வாய்க்கிழமை, சூலூர் சிந்தாமணிபுதூர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, விபத்தில் சிக்கிவிட்டார்.. உடனடியாக மீட்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர்.. தீவிர சிகிச்சை தந்தும் துரைக்கண்ணுவை காப்பாற்ற முடியவில்லை.. பரிதாபமாகவே அவர் உயிர் பிரிந்தது..

போஸ்ட் மார்ட்டம்
இதையடுத்து, துரைக்கண்ணுவின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு, உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.. அந்த உடலை பெற்று கொண்ட குடும்பத்தினரும், கண்ணம்பாளையம் சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.. துரைக்கண்ணு இறந்ததில் இருந்தே கதறி கதறி அழுது கொண்டிருந்தார் ஜெகஜோதி.. அவரால் துரைக்கண்ணுவை மறக்கவும் முடியவில்லை.

கதறி அழுதார்
அதனால், இதையடுத்து, மறுநாள் துரைக்கண்ணுவை புதைத்த சுடுகாட்டுக்கு ஓடிவந்தார் ஜெகஜோதி.. துரைக்கண்ணுவை புதைத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு கதறி கதறி அழுதார். ஒருகட்டத்தில் துரைக்கண்ணுவின் முகத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்து, சடலத்தை புதைத்த இடத்தில் குழியை தோண்டவும் முயற்சித்தார்.. ஆனால், இதை அங்கிருந்தோர் பார்த்துவிட்டு, உடனடியாக துரைக்கண்ணுவின் வீட்டுக்கு தகவல் சொல்லவும், அவர்கள் பதறி போய் ஓடிவந்தனர்.. பிறகு ஜெகஜோதியை திட்டி, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

தற்கொலை
மறுபடியும் தன்னுடைய வீட்டுக்கு சென்று அழுது கொண்டே இருந்தார் ஜெகஜோதி.. இறுதியில், ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மதுவில், சாணி பவுடரை மிக்ஸ் செய்து குடித்துவிட்டார்.. ஆனால் மயக்க நிலைதான் வந்ததே தவிர, உயிர் போகவேயிவில்லை.. இவ்வளவு நேரமாகியும் உயிர் போகாததால், அப்படியே எழுந்து போய் வீட்டுக்கு பின்னாடி உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு கொண்டார்.பிறகு அவ்வழியாக வந்தவர்கள், தூக்கில் தொங்கும் ஜெகஜோதி சடலத்தை கண்டு அலறி, சூலூர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.. அவர்கள் விரைந்து வந்து ஜெகஜோதியின் சடலத்தை கைப்பற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதிர்ச்சி
இவரது கணவர் நிலை என்ன? அந்த குந்தைகள் என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை.. ஆனால், 29 வயது காதலனின் இழப்பை ஏற்றுக் கொள்ளும் சக்தியற்ற நிலையில், 45 வயது பெண்ணின் தற்கொலை, சூலூர் பகுதி மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது. இறந்து புதைத்த சடலத்தை காண ஒரு பெண் சுடுகாட்டுக்கு சென்றதும், காதலன் முகத்தை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று குழியை தோண்ட முயன்றதும் இதுவரை கேள்விப்படாத சம்பவமாக நமக்கு இருக்கிறது!
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications