பிறந்த குழந்தையை பார்க்க ஆசையாக சென்ற உறவினர்கள்.. விபத்தில் சிக்கி 5 பேர் பலி
கோவையை சேர்ந்த 5 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
Recommended Video
கோவை: பிறந்த குழந்தையை பார்க்க ஆசை ஆசையாக சென்ற உறவினர்கள் கோரமான சாலை விபத்தில் சிக்கினர். இதில் 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, 7 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர்.
கேரள மாநிலம் பாலக்காடு சந்திரா நகர் பகுதியில் உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளதால், அதை பார்ப்பதற்காக, கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று கிளம்பியது.

மொத்தம் 12 பேர் ஒரு ஆம்னி வேனை பிடித்து பாலக்காட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த முகம்மது ஷாஜகான் என்பவர்தான் அந்த வேனை ஓட்டினார்.

தமிழக எல்லையான வாளையாறை கடந்து சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன், ரோட்டோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட வேனில் பயணம் செய்த பைரோஸ் பேகம், ஆலுவா ஷூஃபியா, ஷெரின், ரியான் உட்பட 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் குழந்தைகளும் அடக்கம்.

வேனில் பயணித்த 7 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இவர்களை மீட்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கோவையிலுள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற வாளையாறு போலீசார் 5 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கண்டெய்னர் லாரியை நிறுத்தி வைத்திருந்த ஓட்டுநரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications