சாவிலும் 5 பேருக்கு வாழ்க்கை.. உடல் உறுப்பு தானம் செய்த ஈரோடு விவசாயி..!
கோவை: ஈரோட்டில் மூளைச் சாவடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். உடல் உறுப்பு தானம் அளிக்க முன்வந்த அவரது குடும்பத்தினருக்கு மருத்துவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அதேபோல, உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடல் உறுப்பு தானம் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழகத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்வோருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போதைய நிலவரத்தின்படி சிறுநீரகம், கல்லீரல், இதயம் என பல்வேறு உடல் உறுப்புகள் தேவைப்படுவதாக 7,815 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

உடல் உறுப்புகள் தானம் திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை மூளைச் சாவடைந்த 250 பேரிடம் இருந்து 1,330 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மூளைச் சாவடைந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகள் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், நம்பியூர், பொலவபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பழனிசாமி, ஜேஸ்வரி தம்பதி. இவர்களது மகன் ஐங்கரன் வயது 47. இவருக்கு கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். இதையடுத்து, உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி ஐங்கரனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது . அதனைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் தங்களது மகன் ஐங்கரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டன. ஐங்கரனின் சிறுநீரகங்கள் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், கண்கள் மற்றும் தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஐங்கரனின் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்குப் பொருத்தும் வகையில் உரிய நேரத்தில் திறம்பட செயல்பட்டு உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கூறுகையில், பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதன் மூலம் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். உடல் உறுப்புகளை தானமாக வழங்கி 5 பேருக்கு மறுவாழ்வு அளித்த ஐங்கரனின் குடும்பத்தினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கின்போது அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், ஆந்திர மாநிலத்திலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications