"விநோத சபலம்".. அழகியிடம் கவிழ்ந்த "பேரழகன்".. பாழடைந்த பங்களாவில் அக்கப்போர்.. துடிக்கும் துடியலூர்
61 வயது நபரை மிரட்டி பணம் பறித்த பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்
கோவை: சபலத்தில் விழுந்த தாத்தா ஒருவர் நொந்து போய் இருக்கிறார்.. சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்..!!
4 நாளைக்கு முன்புகூட ஒரு சபல சம்பவம் நடந்தது.. 72 வயது தாத்தா, ராஜி என்ற பியூட்டி பார்லர் பெண்ணிடம் சபலத்தில் விழுந்தார்.. கேரளாவின் சாவக்காடு பகுதியை சேர்ந்தவர் அந்த தாத்தா.. ரொம்ப வசதியானவராம்..
20 வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.. நண்பர் ஒருவர் மூலம் தாத்தா அறிமுகம் கிடைக்கவும், இவரிடம் ராஜி மிகவும் நெருக்கமாகி உள்ளார்.. ஒருகட்டத்தில் ராஜியின் பியூட்டி பார்லர் ரூமிலேயே இருவரும் தனிமையாக இருந்து வந்துள்ளனர்..

உல்லாசம் + ஜாலி
உல்லாசமாக இருக்கும்போது, அந்த போட்டோக்களை ராஜி தன்னுடைய செல்போனில் எடுத்து கொண்டு, அந்த நிர்வாண போட்டோக்களை, தாத்தாவிடமே காண்பித்து, 50 லட்சம் வேண்டும் என்று மிரட்டி உள்ளார்.. 3 லட்சம் ரூபாய் வரை பணமும் கொடுத்துள்ளார்.. அதற்குமேல்தான், துணிந்து போலீசுக்கு சென்றார்.. இப்போது ராஜி சிறையில் உள்ளார்.. இன்னொரு சம்பவம் நம் கோவையிலேயே நடந்துள்ளது.. இந்த தாத்தாவுக்கு 61 வயது..

ஸ்வீட் வாய்ஸ்
சித்ரா ஒரு தனியார் கம்பெனியில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.. கடந்த 16ம் தேதி தாத்தாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.. எதிர்முனையில் ஒரு பெண் பேசியுள்ளார்.. அந்த பெண் தாத்தாவிடம், "நான் உங்க வீட்டு பக்கத்தில்தான் வசித்து வந்தேன்.. உங்களை அடிக்கடி பார்த்திருக்கிறேன்.. ரொம்ப அழகாக இருப்பீங்க.. உங்களை போன்ற ஒரு அழகனை நான் பார்த்ததேயில்லை என்று வர்ணிக்க ஆரம்பித்துள்ளார்..

கண்டிஷன் + டிரஸ்
இதெல்லாம் கேட்டு, தாத்தா வானத்தில் பறந்தார்.. பிறகு அடிக்கடி 2 பேரும் போனிலேயே மணிக்கணக்கில் பேச ஆரம்பித்தார்கள்.. ஒருநாள் திடீரென அந்த பெண், "நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்.. நாம் 2 பேரும் சந்தித்து பேசி ஜாலியாக இருக்கலாம்.. எப்போது சந்திக்கலாம் என்று கேட்டுள்ளார்.. அதற்கு அந்த தாத்தாவும் துடியலூரில் சந்திக்கலாம் என்றார்.. அப்போது அந்த பெண், "ஆனால் ஒரு கண்டிஷன்.. நீங்கள் என்னை சந்திக்க வரும்போது, டிப்டாப் டிரஸ் அணிந்து கொண்டு வர வேண்டும்.. வரும்போது நகைகளையும் அணிந்து வரவேண்டும்" என்று சொன்னார்..

ஸ்மார்ட் லுக்
இதைகேட்டதும் தாத்தா, "டிப்டாப் டிரஸ் ஓகே, எனக்கு எதுக்கு நகை?" என்றார்.. உடனே அந்த பெண், டிப்டாப் டிரஸ்ஸில், அந்த நகைகளும் இருந்தால், நீங்கள் இன்னும் அழகாக இருப்பீர்கள்" என்றார்.. ஏற்கனவே பறந்துட்டு இருந்த தாத்தா, இதைக்கேட்டதும் இன்னும் உயரத்துக்கு போனார்.. சம்பவத்தன்று, அந்த பெண் சொன்னபடியே டிப்டாப் டிரஸ் அணிந்து கொண்டார்... வீட்டில் இருந்த 5 பவுன் நகையையும் எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டார்.. அந்த பெண்ணை நேரில் சந்திக்க, பைக்கை ஸ்டார்ட் செய்து, சிட்டாய் துடியலூர் நோக்கி பறந்தார்.. குறிப்பிட்ட இடத்தில் அந்த பெண் நின்று கொண்டிருந்தார்..

பாழடைந்த பங்களா
தாத்தாவை பார்த்ததும், கரட்டுமேடு பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.. அங்கு 2 பேரும் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர்.. அந்த நேரம்பார்த்து, 2 இளைஞர்கள் அங்கு வந்துள்ளனர்.. ஒரு ஓரமாக நின்று அந்த இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்களாம்.. அதற்கு பிறகுதான், இந்த ஜோடி அருகில் வந்துள்ளனர்.. அதில் ஒரு இளைஞர், "நீ யார்? என் மனைவியுடன் உனக்கென்ன பேச்சு?" என்று தாத்தாவிடம் கேட்டுள்ளார்.. பிறகு, இளம்பெண்ணுடன் தாத்தாவை சேர்ந்து இருக்குமாறு சொல் செல்போனில் போட்டோ எடுத்துள்ளார்.. அங்கேயே, அப்போதே, அந்த போட்டோவை காட்டி தாத்தாவிடமும் பணமும் கேட்டு மிரட்டியிருக்கிறார்.

தொப்பென விழுந்த தாத்தா
பணம் தராவிட்டால், இந்த போட்டோவை குடும்பத்தாருக்கு அனுப்பிவிடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.. இதனால் பயந்துபோன முதியவர், அவர்களின் காலில் விழுந்து, தன்னை விட்டுவிடுமாறும், இந்த விஷயம் தெரிந்தால் வீட்டில் தன் மானமே போய்விடும் என்றும் கெஞ்சி உள்ளார்.. அதற்குபிறகு, கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையையும் பறித்து கொண்டு தாத்தாவை அங்கிருந்து விரட்டி விட்டுள்ளன.... பதறியடித்து கொண்டு சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார் தாத்தா.. இப்போது, அந்த பெண் யார்? அந்த இளைஞர்கள் 2 பேர் யார்? எங்கே இருக்கிறார்கள்? இதுபோல் வேறு யாரையாவது மோசடி செய்திருக்கறார்களா? என்றெல்லாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேடி வருகிறார்கள்.. சில காலம், வானத்தில் பறந்து கொண்டிருந்த தாத்தா, ஒரே செகண்டில் தொப்பென்று கீழே விழுந்ததுதான் மிச்சம்..!!












Click it and Unblock the Notifications