கோவையில் நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 76 வீடுகள் அதிரடியாக இடிப்பு
கோவை : கோவை வடவள்ளி அருகே பி.என்.புதூா் கோகுலம் காலனியில் கிருஷ்ணாம்பதி குளத்துக்கு வரும் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 76 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். கடந்த திங்கள் அன்று கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் ஆக்கிரிமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கோவில்கள் இடித்து அகற்றப்பட்டன.
கோவை மாநகராட்சிப் பகுதியில் நீா்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடித்து அகற்ற சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதன்படி கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள குளங்களைச் சுற்றி ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றி வருகிறார்கள்-.

தடாகம் சாலை
கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முத்தண்னன் குளத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. இதனால் அக்குளக்கரையில் வசிக்கும் மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், காபி கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழக்கப்பட்டன. இதனால் சில மாதங்களுக்கு முன்பு சுமார் 1600 பேர் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு அரசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்றுவிட்டனர்.அவர்களது வீடுகள் முதல் கட்டமாக இடிக்கப்பட்டன.

பொதுமக்கள் போராட்டம்
இதனிடையே மீதமுள்ள வீடுகள் மற்றும் அப்பகுதியில் சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐந்துக்கு மேற்பட்ட கோயில்களும் . மாநகராட்சி நிர்வாகமும் போலீசாரும் வந்து கடந்த திங்கட்கிழமை இடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவராம் நகரில் பொதுமக்கள் கோயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்போது பரபரப்பு ஏற்பட்டது.

மாற்று வீடுகள்
இந்நிலையில் கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட வடவள்ளியை அடுத்த பி.என்.புதூா் கோகுலம் காலனியில், கிருஷ்ணாம்பதி குளத்துக்கு வரும் வாய்க்காலை ஆக்கிரமித்து 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு 76 வீடுகள் கட்டப்பட்டு இருநதன. இந்த வீடுகளில் குடியிருந்தவா்களுக்கு குடிசை மாற்று வாரியம் சாா்பில், கோவைப்புதூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு
இவா்கள் அந்த வீடுகளுக்கு குடிபெயா்ந்து சென்றதைத் தொடா்ந்து, மாநகராட்சி நகரமைப்பு திட்ட அதிகாரி ரவிசந்திரன் தலைமையில் ஆக்கிரமிப்பு வீடுகள் 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வியாழக்கிழமை அன்று இடித்து அகற்றப்பட்டது. மாற்று வீடுகளுக்கு செல்லாமல் இருந்த பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் கலைந்து போக செய்தனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications