ஜாதி, மதம் இல்லை.. சான்றிதழ் வாங்கி அசத்திய கோவை நபர்.. மூன்றரை வயது மகளுக்காக ‘சாதி’த்த அப்பா!
கோவை : கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மூன்றரை வயது மகள் எந்த சாதியையோ, மதத்தையோ சாராதவர் என்ற சான்றிதழை வருவாய் துறை மூலம் பெற்று உள்ளது தேசிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது.
குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தொடங்கி, உதவித் தொகை, வேலை வாய்ப்பு, முதியோர் உதவித் தொகை வரை என அனைத்திற்கும் சாதி சான்றிதழ் அவசியமானதாகக் கருதப்படுகிறது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடும் சாதி மதத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என்பதும் அனைவரும் அறிந்ததே.

சாதி சான்றிதழ் கோரிக்கை
இதன் காரணமாக தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னரே சாதிச் சான்றிதழ் வாங்கி வருகின்றனர். இது தந்தை தாய் வழி சாதி சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு, வழங்கப்படுகிறது. தமிழக அரசின் வருவாய் துறை வழங்கும் சாதி சான்றிதழில் சம்மந்தப்பட்டவரின் சாதி, பிரிவு, மதம் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்படும். இதனை வைத்தே குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதியில்லை என சான்றிதழ்
இந்நிலையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மூன்றரை வயது மகள் எந்த சாதியையோ, மதத்தையோ சாராதவர் என்ற சான்றிதழை வருவாய் துறை மூலம் பெற்று உள்ளது தேசிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது. கோவையில் வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நரேஷ் கார்த்திக், தனது மகளின் சேர்க்கைக்காக அணுகிய ஒவ்வொரு பள்ளியிலும் ஜாதி மற்றும் மத சான்றிதழை கேட்டுள்ளனர். அந்த பகுதியை நிரப்பாமல் அவர் காலியாக விட்டுவிட்டதால் விண்ணப்பத்தை நிறுத்தி வைத்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

அசத்திய பெற்றோர்
இதனையடுத்து கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் தனது மகள் எந்த சாதியையோ, மதத்தையோ சார்ந்தவர் இல்லை என சான்றிதழ் வழங்க வேண்டும் என விண்ணப்பித்தார். இதனையடுத்து அவரது குழந்தை ஜி.என்.வில்மா எந்த ஜாதியையும், மதத்தையும் சேர்ந்தவர் அல்ல என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய நரேஷ் கார்த்திக்," மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தில் சாதி, மதம் குறிப்பிட தேவையில்லை என்று தமிழக அரசு கடந்த 1973-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்து உள்ளது. ஆனாலும் பள்ளிகளில் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சாதி சான்றிதழ் கேட்கின்றனர்.

ஏற்றத்தாழ்வு நீங்கும்
சாதி, மதம் ஒழிந்தால் மட்டுமே மக்களிடம் ஏற்றத்தாழ்வு நீங்கும். அதை கருத்தில் கொண்டு எனது மகளுக்கு கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் சாதி, மதம் சாராதவர் என்ற சான்றிதழ் பெற்று உள்ளேன். கோவை மாவட்டத்தில் முதல், முறையாக இதுபோன்ற சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. வேலைக்காக விண்ணப்பிக்கும் போது எம்.பி.சி.,பி.சி., ஓ.சி., எஸ்.சி., எஸ்.டி., ஆகிய பிரிவுகளை குறிப்பிடுகின்றனர். அதில் என்.சி. எனப்படும் நோ காஸ்ட் சாதி சாராதவர் என்ற பிரிவை சேர்க்க வேண்டும். அப்போது தான் சாதி, மதம் சாராதவர் விண்ணப்பிக்க எளிதாக இருக்கும்" என கூறினார். இந்த செய்தி தற்போது தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications