மது போதையில் ரகளை .. கேள்வி கேட்டவர் மீது மூஞ்சி மேலேயே பட்டாசு வீசிய கோவை புள்ளிங்கோஸ்
கோவை: தீபாவளி அன்று கோவை பீளமேட்டில் பட்டாசுகளை கொளுத்தி அச்சுறுத்தும் வகையில் வீசிய மது போதை இளைஞர்களை தட்டி கேட்டவர் மீது பட்டாசுகளை வீசியுள்ளனர் புள்ளிங்கோஸ். அவரது வீட்டின் மீதும் பட்டாசுகைள வீசி அச்சுறுத்தி உள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை கடந்த நவம்பர் 12ம் தேதி தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு அன்று இரவு பலரும் உற்சாகமாக பட்டாசு வெடித்து மகிழ்ந்தார்கள். கோவை பீளமேடு கோபால்சாமி நாயுடு ஏரியா பின்புறம் உள்ள வீட்டின் மீது புள்ளிங்கோஸ் இளைஞர்கள் சிலர் தீபாவளி அன்று இரவு 11 மணி அளவில் மதுபோதையில் பட்டாசுகளை வீசி ரகளையில் ஈடுபட்டுள்ளார்கள்.

அப்போது அந்த வீட்டில் இருந்த பாலச்சந்தர் ஏன் இப்படி ரகளையில் ஈடுபடுறீங்க என்று தட்டிக்கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த இளைஞர்கள், அவர் மீது ஆவேசத்துடன் பட்டாசுளை கொழுத்தி வீசிவிட்டனர். அதேபோல் அவரது வீட்டின் மீதும் சரமாரியாக பட்டாசுகளை வீசி அச்சுறுத்தினர். மேலும் பாலச்சந்தரை ஆபாசமாக பேசி அவர்களை மிரட்டினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளுடன் கோவை பீளமேடு காவல்நிலையம் சென்ற பாலச்சந்தர், நடந்த விவரத்தை கூறி புகார் அளித்தார்.
பாலச்சந்தர் அளித்த புகாரின் பேரில், கோவை பீளமேடு போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இளைஞர்கள் மது போதையில் பட்டாசுகளை கொளுத்தி அச்சுறுத்தும் வகையில் வீசியது உறுதியானது.. இதையடுத்த ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது ஆறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்ட விரோதமாக கூடுதல், வெடிபொருட்களை கவனக்குறைவாக கையாளுதல், ஆபாசமாக பேசுதல், கொலைமிரட்ட்ல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே சம்பவம் நடந்த கோவை பிளேமேடு பகுதியில் ரோந்து பணியை போலீசார் அதிகப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
-
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications