இறந்து போன மனைவிக்காக.. இப்படியும் ஒரு கணவனா.. கோவையே நெகிழ்ந்துடுச்சு!
கோவை: மனைவி இறந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தினமும் அவரது கல்லறைக்கு இரண்டு முறை சென்று வழிபாட்டு வருகிறார் அவரது கணவர். கட்டிடத் தொழிலாளியான அவரது அன்பை பற்றித்தான் இந்த செய்தியில் நாம் பார்க்க போகிறோம்.
அப்பா, அம்மா, அக்கா,அத்தை, மாமா, சித்தப்பா என எத்தனை உறவுகள் நம்முடன் இருந்தாலும், அத்தனை உறவுகளும் நம் ரத்த உறவுகள். அவர்களுடன் நாம் பிறந்தது முதல் பழகி வாழ்ந்திருப்போம்.அவர்களை பற்றி நமக்கு முழுமையாக தெரிந்திருக்கும். அவர்கள் நம் மீது அன்பு செலுத்தி இருப்பார்கள். நாமும் அவர்கள் மீது பிரியமாக இருப்போம். இதெல்லாம் மிக இயற்கையான நிகழ்வு.

ஆனால் கணவன்-மனைவி உறவு என்பது மிகவும் மாறுபட்டது. யாரென்றே தெரியாத ஆண் தான் இனி உலகம். யாரோ தெரியாத பெண் தான் இனி உலகம். அவர்களை சுற்றித்தான் எல்லாம் இயங்க போகிறது என்பது நிச்சயம் வித்தியாசமானது. கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும் பல்வேறு விஷயங்களை ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு விட்டுக்கொடுத்து திகட்டாத அன்பை பரிமாறும் உறவு, உலகில் மிகவும் ஆத்மார்த்தமானது. இதனால் ஏதோ ஒரு காரணத்தால் தங்கள் துணை இறந்த பிறகு அவர்களை மறக்க முடியாமல் தவிக்கும் கணவன், மனைவிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
உலகின் எத்தனை உறவுகள் உடன் இருந்தாலும், மனைவி இல்லாமல் போனால் அவர், நடை பிணமாகிவிடுவார். அதுவும் முதுமையில் மனைவியை இழப்பது வாழ்வில் மிக கொடுமையானது. மனைவியை இழந்த கணவனோ, கணவனை இழந்த மனைவியோ, அவர்களின் பரிதவிப்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
சரி விஷயத்திற்கு வருவோம். இறந்த தன் மனைவியை மறக்க முடியாமல் அவரது கல்லறைக்கு தினமும் சென்று வழிபட்டு வருகிறார் கோவையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவர். கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த 55 வயதாகும் சுப்பிரமணியன் (வயது 55). இவரது மனைவி சரோஜினி. இவர் கணவர் சுப்பிரமணியன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். இவர்கள் வாழ்க்கையில் அன்பும், பாசமும அளவுக்கு அதிகமாக இருந்துள்ளது. இல்லற வாழ்கையில் இனிமையாக சென்று கொண்டிருந்த நிலையில், சரோஜினி உடல் நலக்குறைவால் திடீரென மரணம் அடைந்தார்.
தினமும் அன்பாக கவனித்து வந்த மனைவி உயிழந்ததை சுப்பிரமணியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனைவியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் முதல் அவரது கல்லறைக்கு சுப்பிரமணியன் செல்லத் தொடங்கினார். தினமும் வேலைக்கு செல்வதற்கு முன்பாக காலையில் சரோஜினியின் கல்லறைக்கு செல்வதை வழக்கமாக்கினார்.
அங்கு கல்லறை முன்பு விளக்கேற்றி வழிபட்டு விட்டு வேலைக்கு செல்வார். பின்னர் மாலையிலும் கல்லறைக்கு சென்று வணங்குவார். அப்போது அன்று நாள் முழுவதும் தன் வாழ்வில் என்னென்ன நடந்தது என்பதை கல்லறை முன்பு கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சரோஜினி இறந்தாலும் தன்னுடனேயே வாழ்வதாக எண்ணி பேச தொடங்கினார்.
தனது மனைவி மீது சுப்பிரமணியன் கொண்டுள்ள அன்பை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இதுபற்றி சுப்பிரமணியன் கூறும் போது, என் மனைவி சரோஜினி, அதிக பாசத்துடன் என்னை கவனித்து வந்தார். அவர் இறந்து போனதை என்னால் தாங்க முடியவில்லை. ஷாஜகான் தனது மனைவிக்காக தாஜ்மகால் கட்டியது போல் எனது மனைவிக்காக நானும் எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்பது லட்சியமாக உள்ளது. விரைவில் அதனை செய்து முடிப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications