கோவையில் ஒரு எஸ்எம்எஸ்ஸில் 10 லட்சம் சம்பாதித்த தம்பதி.. விசாரித்த போது தெரிந்த மிகப்பெரிய உண்மை
கோவை: கோவை சரவணம்பட்டியில் தனியார் நிறுவனத்தை நடத்திவந்த ஒரு பெண்ணுக்கு, செல்போனில் குறுந்தகவல் வந்தது. பங்கு சந்தையில் அதிக லாபம் பெற்று தருவதாகவும், முதலீடு செய்யுமாறும் அதில் தெரிவித்தனர். இதனை பார்த்து தொடர்பு கொண்ட, கோவை பெண்ணிடம் தாங்கள் கொடுக்கும் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறும், இரட்டிப்பு லாபம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதனை நம்பிய பெண் ரூ.10 லட்சத்தை இழந்துள்ளார்.இந்த விவகாரத்தில் தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பங்குச் சந்தையில் அதிக லாபம் கிடைக்கும் என்று கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து மோசடி செய்வது இந்தியா முழுவதுமே வேகமாக பரவி வருகிறது. மக்கள் கோடிக்கணக்கில் தங்கள் முதலீடுகளை இழந்துபரிதவித்து வருகிறார்கள். பங்கு சந்தை மோசடியை பொறுத்தவரை எப்படி நடக்கும் என்றால், சமூக ஊடகங்கள் & வாட்ஸ்அப் வழியாகவே அதிகமாக நடக்கும். அதிக லாபம் ஈட்டும் விளம்பரங்களை அனுப்புவார்கள். உதாணரமாக தினமும் 10 ஆயிரம் கிடைக்கும். தினமும் 20 ஆயிரம் சம்பாதிக்கலாம் என சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப், டெலிகிராம் போன்றவற்றில் மெசேஜ் மற்றும் லிங்க் அனுப்புவார்கள்.

அந்த வாட்ஸ் அப், டெலிகிராம் குழுக்களில், தாங்கள் பிரபல நிதி நிறுவனங்களின் அதிகாரிகள், செபி பதிவு பெற்ற நிதி ஆலோசகர்கள் என்று கூறிக்கொள்வார்கள். பின்னர் பணத்தை முதலீடு செய்வோரின் நம்பிக்கையைப் பெற, முதலில் மிகச் சிறிய தொகையை முதலீடு செய்யச் சொல்வார்கள். அந்தத் தொகையைச் சில நாட்களில் லாபத்துடன் திரும்பக் கொடுப்பார்கள். இதனால், முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்து, பெரிய தொகையை முதலீடு செய்வார்கள். அவர்கள் தான், இந்த வலையில் சிக்குவார்கள்..
பிரபலமான மற்றும் நம்பகமான நிதி நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்தி, அதேபோல் தோற்றமளிக்கும் போலி வலைத்தளங்களையும், ஆப்களையும் உருவாக்கும் அவர்கள், முதலீட்டாளர் பணம் அனுப்பியவுடன், அந்தப் போலியான செயலியில் முதலீட்டுத் தொகை பல மடங்கு பெருகியிருப்பது போலவும், கோடிக்கணக்கில் இலாபம் கிடைத்தது போலவும் காட்சிகள் தோன்றும். இறுதியில் அந்த தொகையைத் திரும்பப் பெற, நீங்கள் 30% வரி ( செலுத்த வேண்டும் என்பார்கள். முதலீட்டாளர் கூடுதல் தொகையை அனுப்பிய பிறகும், பணத்தை எடுக்க முடியாது. இறுதியில் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு அந்தப் பணத்துடன் மோசடியாளர்கள் எஸ்கேப் ஆகிவிடுவார்கள். இப்படித்தான் மோசடி நடக்கிறது. கோவையில் நடந்த மோசடி பற்றி பார்ப்போம்.
கோவை சைபர் கிரைம் போலீசார் வெளியிட்ட தகவலின்படி, கோவை சரவணம்பட்டியில் தனியார் நிறுவனத்தை நடத்திவந்த ஒரு பெண்ணுக்கு, செல்போனில் எஸ்எம்எஸ் வந்தது. பங்கு சந்தையில் அதிக லாபம் பெற்று தருவதாகவும், முதலீடு செய்யுமாறும் ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்கள். இதனை பார்த்து கோவை பெண் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் தாங்கள் கொடுக்கும் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறும், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்கள்.
இதனை நம்பி பல்வேறு தவணைகளாக அந்த பெண், ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தார். அந்த பணத்தை திரும்ப கேட்டபோது, லாபத்தையும், அசல் தொகையையும் திரும்பி தராமல் மோசடி செய்துவிட்டார்களாம். இதுகுறித்து சைபர்கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதே போன்ற மோசடி ஆசாமிகள் தென்காசி, திருச்சி, கன்னியாகுமரி, நாமக்கல், ஆந்திர மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக தென்காசி சைபர் கிரைம் போலீசார் திருவள்ளூரை சேர்ந்த ராஜூ (வயது41), முகமது அனீப் (44), அவருடைய மனைவி அன்னு (34)ஆகியோரை கைது செய்திருந்தனர். கோவையிலும் மோசடியில் ஈடுபட்டதால், கோவை போலீசார் தென்காசிக்கு சென்று 3 பேரையும் கோவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். மோசடி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications