நாட்டாமை படப் பாணியில் சட்டம் பேசிய விவசாயி? சார்பதிவாளரை மிரட்டியது ஏன்? விளக்கம்!
கோவை: பச்சைத் துண்டு போட்டபடி சார்பதிவாளரை விவசாயி ஒருவர் மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ ஒன்று வைரலானது தொடர்பாக அந்த விவசாயி விளக்கம் அளித்துள்ளார்.
சில நாட்கள் முன்னதாக இணையத்தில் ஒரு வீடியோ பதிவு வைரலானது. அதில் பச்சை துண்டைப் போட்டுக்கொண்டு ஒருவர் சார் பதிவாளரைப் பார்த்து சட்டரீதியாக சில பாயிண்டுகளை முன்வைத்தார். காவல்துறை வழக்கைப் பதிவு செய்யவில்லை என்றால் ஹைகோர்ட் போய் ரைடக்டா டைரக்ஷன் வாங்கிக் கொண்டு வந்துவிடுவேன் என்று பேசி இருந்தார். அவரை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். அங்குள்ள மக்கள் ஆவேசமாகப் பேசினார்கள். அங்கே நின்ற அனைவரும் விவசாயிகள் என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் அதிகாரி விவசாயிகளுக்கு உரிய விளக்கம் அளிக்காமல் வெளியேறவே உடனே அங்கே நின்றிருந்த விவசாயச் சங்கத் தலைவர் ஒருவர், "நீங்கள் ஒன்றும் கடவுள் அல்ல. நீங்கள் ஒன்றும் அரசர் அல்ல. நாங்கள் ஏதோ உங்களிடம் பிச்சைக் கேட்டு வரவில்லை" என்று பச்சை துண்டைப் போட்டுக் கொண்டு தனது ஆதரவாளர்களுடன் நின்றபடி பதிவுத்துறை அதிகாரியைக் கொங்கு தமிழில் மிரட்டினார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலானது. இவர் யார்? இவருக்கு என்ன பிரச்சினை? காவல்துறை அதிகாரிகளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே அவர் அதிகாரியை ஏன் மிரட்டினார்? எனப் பல கேள்விகள் இணையத்தில் உலா வந்தன.
அதிகாரியிடம் மிரட்டலாகப் பேசியவர் பெயர் குமார ரவிக்குமார். இவர் கொங்குப் பகுதியைச் சேர்ந்தவர். அங்கே என்ன நடந்தது? என்ன பிரச்சினை? அதைப் பற்றி விளக்கம் அளிக்க முன்வந்த குமார ரவிக்குமார், "கடந்த 2 ஆண்டுகள் முன்பு நடந்த ஒரு பிரச்சினையை நீங்கள் முதலில் தெரிந்து கொண்டால்தான் நான் ஏன் அதிகாரியிடம் கடுமையாக நடந்து கொண்டேன் என்பது புரியவரும்.
கோவையில் உள்ள அன்னூர் ஊராட்சி மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3,800 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்தப் போவதாக ஒரு அறிவிப்பு வெளியானது. அதை எதிர்த்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தைத் தொடங்கினார்கள். அதில் எங்கள் அமைப்பைக் கலந்து கொள்ளச் சொல்லி அழைப்பு கொடுத்தார்கள். அதை நாங்கள் தான் முன்னெடுத்து நடத்தினோம்.

அரசு கையகப்படுத்த உள்ளதாகச் சொன்ன அனைத்து நிலங்களும் விவசாய பகுதிகள். ஆகவே அதை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அரசும் எங்கள் போராட்டத்தை ஏற்றுக் கொண்டு அரசிதழ் வெளியிட்டது. ஒரு நிறுவனத்திடம் உள்ள 1000 ஏக்கர் நிலத்தைப் பெற்று அதில் தொழில் பூங்கா அமைப்போம் என்றும் வாக்குறுதி அளித்தது.
இந்தத் தொழில் பூங்கா அரசு தொடங்கப் போகிறது என்று சொன்ன உடனேயே அந்தச் சுற்றுவட்டார நிலங்களின் விலை சுத்தமாகக் குறைந்துவிட்டது. இப்போது அன்னூர், புளியம்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய மூன்று சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவை திடீரென்று நிறுத்திவிட்டார்கள். அதற்காக வருவாய்த்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் கேட்டால் அப்படி எந்த உத்தரவு போடவில்லை என்றார்கள். எம்பியை விசாரித்தால் அவரும் இல்லை என்றார்.
அப்படி என்றால் ஏன் பத்திரப்பதிவை இந்த சார்பதிவாளர் நிறுத்தி வைத்தார் எனக் கேட்டோம். அதற்கு அந்த பதிவாளர் முறையாகப் பதில் கொடுக்காமல் அலட்சியமாகப் பேசினார். அப்போதுதான் மக்கள் கோபம் கொண்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு நான் பேசினேன். அதுதான் வாக்குவாதமாக மாறிவிட்டது. இப்போது அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். அரசிதழில் அறிவிப்பு வந்துள்ளது. ஆனால், மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட ஆணையை அரசு இன்னும் திரும்பப் பெறவில்லை. அதனால் குழப்பம் நீடிக்கிறது.
அரசிதழுக்கும் அரசாணைக்குமே சில வித்தியாசங்கள் உள்ளன. அதனால் குழப்பம் வருகிறது. ஒரு செல்வந்தர் 1000 ஏக்கர் வைத்துள்ளார். அவர் இந்த விவகாரத்தை வைத்து சுற்றுவட்டாரத்தில் உள்ள நிலங்களைக் குறைந்த விலைக்கு அடித்துப் பிடித்து வாங்கிவிடலாம் என சில சூழ்ச்சிகளைச் செய்கிறார். அவரது அழுத்தம்தான் சார்பதிவாளர் பத்திரப்பதிவை நிறுத்தி வைத்துள்ளார். இங்கே மட்டும் இல்லை. தமிழகம் முழுக்க இந்தப் பத்திரப்பதிவு துறை என்பது லட்சம் தலைவிரித்தாடும் இலாக்காவாக மாறி இருக்கிறது" என்று கவலைப்படச் சொல்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுக்கவே இல்லை. இந்தப் போராட்டம் அந்தச் சட்டப் பிரிவில் வராது. அதற்கான ஆவணம் எங்களிடம் உள்ளது. மூன்று நாட்கள் பத்திரப்பதிவை நிறுத்தி வைத்ததைப் பதிவாளரே வாய்மொழி வாக்குமூலம் அளித்துள்ளார். அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. எனக்கும் சட்டம் தெரியும். லட்சத்தை எதிர்த்து தொடர்ந்து போராடி வருவதால் காவல்துறை என் மீது பல பொய் வழக்குகளைப் போட்டது. அதனால் என் மகளைச் சட்டம் படிக்கவைத்தேன்.
அப்போதுதான் சட்டம் படிக்க வயது வரம்பு இல்லை எனத் தெரியவந்தது. எனவே மகளுடன் சேர்ந்து நானும் சட்டம் படித்தேன். ஆல் இண்டியா பார் கவுன்சில் நடத்திய தேர்வை முறையாக எழுதி வெற்றி பெற்றும் வழக்கறிஞராகப் பதிவும் செய்துவிட்டேன். ஆனால், வழக்கறிஞராக தொழில் செய்யவில்லை. ஆகவே அப்படி எல்லாம் உடனே பொய் வழக்குப் போட்டுவிட முடியாது. நாங்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டோம்" என்கிறார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications