கோவை மாநகராட்சியில் இருக்கீங்களா.. சொந்த வீடு வெச்சுருக்கீங்களா.. வீடு தேடி வருது குட் நியூஸ்
கோவை: கோவை மாநகராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் எளிமையாக சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தும் வகையில் சிறப்பு முகாம் நாளை அக்டோபர் 26 மற்றும் 27 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சிக்கு வருவாய் வழங்குவதில் முக்கியப் பங்கு வகிப்பது சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் உள்ளிட்ட வரிகள்தான். இந்த வரிகள மூலமாகத்தான் கோவை மாநகராட்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், சொத்து வரி ஆறு மாதத்துக்கு ஒருமுறையும், குடிநீர் கட்டணம் இரு மாதத்துக்கு ஒருமுறையும் வசூலிக்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு வரிவசூல் முகாம் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) வரிவசூல் பணி நடைபெறும்.
மேலும், அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் அக்டோபர் 26, 27 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். வார்டு எண் 56க்கு சுங்கம் மைதானம், ஒண்டிப்புதூர், வார்டு எண் 78க்கு நேரு நகர், பேருந்து நிறுத்தம் அருகில், வார்டு எண் 37க்கு மாகாளியம்மன் கோவில் தெரு, கல்வீரம்பாளையம் (சனிக்கிழமை மட்டும்) ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன.
அதேபோல, வார்டு எண் 45க்கு கவுண்டப்பன் வீதி, கே கே புதூர் (சனிக்கிழமை மட்டும்), வார்டு எண் 33க்கு அங்கன்வாடி மையம், சக்தி நகர், கவுண்டம்பாளையம் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்), வார்டு எண் 34க்கு மணிமகால், பூம்புகார் நகர், இடையர்பாளையம் ரோடு (ஞாயிற்றுக்கிழமை மட்டும்), வார்டு எண் 25க்கு காந்திமாநகர், அரசு உயர் நிலை பள்ளி (Government High school) ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறவுள்ளது.
வார்டு எண் 28க்கு காமதேனு நகர், சுகாதார ஆய்வாளர் அலுவலகம் (SI Ward office), வார்டு எண் 85க்கு கோயம்புத்தூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோணவாய்கால்பாளையம், வார்டு எண் 88க்கு தர்மராஜா கோவில், குனியமுத்தூர், வார்டு எண் 96க்கு கோயம்புத்தூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, குறிச்சி, வார்டு எண் 32க்கு சிறுவர் பூங்கா, நாராயணசாமி வீதி, சங்கனூர்பெருமாள் கோவில் வீதி, நியூ கலெக்ஷன் சென்டர் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.
வார்டு எண் 70க்கு மா.ந.க. மாநகராட்சி பள்ளி. மா.ந.க.வீதி, வார்டு எண் 80க்கு ஓக்கிலியர் காலனி ஸ்கூல், கெம்பட்டி காலனி ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது. மேலும், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26, 27) ஆகிய இரண்டு நாட்களிலும் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்கள் மற்றும் மேற்கண்ட வரிவசூல் முகாம்களும் வழக்கம் போல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும்.
எனவே, பொதுமக்கள் இவ்வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications