கோவை மாநகராட்சிப் பகுதியில் உங்க வீடு இருக்கா?.. அப்போ கண்டிப்பா இதை நோட் பண்ணுங்க!
கோவை: கோவையில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தும் வகையில், சிறப்பு முகாம் நாளை அக்டோபர் 19 மற்றும் 20 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி சார்பில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் அவ்வப்போது சிறப்பு முகாம் அமைத்து வசூலிக்கப்படுகின்றன. இதில், சொத்து வரி ஆறு மாதத்துக்கு ஒருமுறையும், குடிநீர் கட்டணம் இரு மாதத்துக்கு ஒருமுறையும் வசூலிக்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு வரிவசூல் முகாம் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) வரிவசூல் பணி நடைபெறும்.
நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு வரிவசூல் முகாம் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் நீங்களாக) வரிவசூல் பணி நடைபெறும்.
மேலும், அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் அக்டோபர் 19, 20 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். வார்டு எண் 6க்கு காசாகிராண்டு அப்பார்ட்மெண்ட் (Casagrand Apprtment) காளப்பட்டி ரோடு, வார்டு எண் 7க்கு நேரு நகர், பேருந்து நிறுத்தம் அருகிலும், வார்டு எண் 38க்கு பொம்மண்ணாம்பாளையம், புவனேஷ்வரி அம்மன் கோவில் (அக்டோர் 19, சனிக்கிழமை மட்டும்), வார்டு 39க்கு தக்ஷா சான்சில் அப்பார்ட் மெண்ட, (Dakshs sansıl apartment), தொண்டாமுத்தூர் ரோடு (சனிக்கிழமை மட்டும்) ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன.
அதேபோல, வார்டு எண் 33க்கு சக்தி நகர், அங்கன்வாடி மையம் (அக்டோபர் 20, ஞாயிற்றுக்கிழமை மட்டும்), வார்டு எண் 38க்கு பட்டீஸ்வரர் விநாயகர் கோவில், (IOB Colony) (ஞாயிற்றுக்கிழமை மட்டும்), வார்டு எண் 75க்கு மாரியம்மன் கோவில் வீதி (ஞாயிற்றுக்கிழமை), வார்டு எண் 25க்கு காந்திமாநகர், அரசு உயர் நிலை பள்ளி (Govt.High.school), வார்டு எண் 28க்கு காமதேனு நகர், சுகாதார ஆய்வாளர் அலுவலகம் (S1 Ward office) ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன.
வார்டு எண் 85க்கு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, குறிச்சி, வார்டு எண் 87க்கு காசாகிராண்டு அப்பார்ட்மெண்ட் (Casagrand Apprtment) குனியமத்தூர், வார்டு எண் 94க்கு மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம், வார்டு எண் 97க்கு அசோசியேசன் கட்டிடம் ஹவுசிங் யூனிட் பேஸ்-2 (Association Building Housing Unit Phase-2), வார்டு எண் 32கேகு நாராயணசாமி லே அவுட், சிறுவர் பூங்கா, வார்டு எண் 70க்கு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, M.N.G Street, வார்டு எண் 63க்கு 80 அடி ரோடு பெருமாள் கோவில் வீதி, மாநகராட்சி வணிக வளாகத்தில், வார்டு எண் 80க்கு கெம்பட்டி காலனி உயர்நிலைப்பள்ளியில் ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன.
மேலும், சனி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19, 20) இரண்டு நாட்களிலும் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்கள் மற்றும் மேற்கண்ட சிறப்பு வரிவசூல் முகாம்களும் வழக்கம் போல் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். எனவே, பொதுமக்கள் இவ்வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications