கோவை மாநகராட்சி பகுதியில் சொந்த வீடு இருக்கா?.. இன்றும் நாளையும் மிஸ் பண்ணிடாதீங்க.. சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாநகராட்சி சார்பில் மாகநகராட்சிப் பகுதியில் சொந்த வீட்டில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டின் அருகிலேயே எளிமையாக சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தும் வகையில், சிறப்பு முகாம் இன்று நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி சார்பில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் அவ்வப்போது சிறப்பு முகாம் அமைத்து வசூலிக்கப்படுகின்றன. இதில், சொத்து வரி ஆறு மாதத்துக்கு ஒருமுறையும், குடிநீர் கட்டணம் இரு மாதத்துக்கு ஒருமுறையும் வசூலிக்கப்படுகிறது.

corporation


கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு வரிவசூல் முகாம் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) வரிவசூல் பணி நடைபெறும்.

மேலும், அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நவம்பர் 30, டிசம்பர் 31 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். சிறப்பு முகாம்கள் நடைபெறும் பகுதிகள்: மேலும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறும் இடங்கள்: வார்டு எண் 7, 8க்கு நேரு நகர், பேருந்து நிறுத்தம் அருகில், காளப்பட்டியிலும், வார்டு எண் 34க்கு மஞ்சீஷ்வரி காலனி, சித்தி விநாயகர் கோவில், கே.கே நகர், கவுண்டம் பாளையத்திலும் (நவம்பர் 30, சனிக்கிழமை மட்டும்) நடைபெறவுள்ளது.

வார்டு எண் 42க்கு ஸ்ரீவாரி அப்பார்ட்மெண்ட், அம்பேத்கர் ரோடு, வேலாண்டிபாளையம் (டிசம்பர் 1, ஞாயிற்றுக்கிழமை மட்டும்), வார்டு எண் 28க்கு காமதேனு நகர், சுகாதார ஆய்வாளர் அலுவலகம் (S1 Ward office), வார்டு எண் 88க்கு தர்மராஜா கோவில் மண்டபம், குனியமுத்தூரிலும், வார்டு எண் 98க்கு பூங்குலழி மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்.நகர், மதுக்கரை ரோடு. சிறுவர் பூங்கா, நாராயணசாமி வீதி, சங்கனூரிலும் நடைபெறவுள்ளது.

வார்டு எண் 63க்கு பெருமாள் கோவில் வீதி, கோயம்புத்தூர் மாநகராட்சி, நியூ கலெக்ஷன் சென்டர், ஓக்கிலியர் காலனி ஸ்கூல், கெம்பட்டி காலனியிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

மேலும், சனிக்கிழமை (30.11.2024) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (01.12.2024) இரண்டு நாட்களிலும் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்கள் மற்றும் மேற்கண்ட சிறப்பு வரிவசூல் முகாம்களும் வழக்கம் போல் காலை 9.00மணி முதல் மாலை 4.00மணி வரை செயல்படும்.

எனவே, பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+