கோவையில் 13 வயது மாணவியிடம் நெருங்கி பழகிய 32 வயது ஆசிரியை.. இரவில் அப்படி சம்பவம்.. அதிரடியாக கைது
கோவை: 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கோவையில் பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை சவுந்தர்யா என்பவர் 13 வயது மாணவியிடம் அத்துமீற முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்னிடையே குறிப்பிட்ட ஆசிரியையின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்படுகிறது. இங்கு உடையாம்பாளையத்தை சேர்ந்த 32 வயதாகும் சவுந்தர்யா என்பவர் சமூக அறிவியல் ஆசிரியையாக பணியாற்ற வந்தார். இவர் அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியிடம் நெருங்கி பழகி வந்தாராம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த மாணவியை ஆசிரியை சவுந்தர்யா வெளியே அழைத்து சென்று உள்ளார்.

அப்போது அந்த மாணவிக்கு ஆசிரியை சவுந்தர்யா திடீரென பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக மாணவி குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக கோவையில் உள்ள ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் ஆசிரியை சவுந்தர்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்கள். ஆசிரியை சவுந்தர்யா, ஆண்களை போன்று முடி வெட்டியும், பேண்டு, சட்டையும் அணிந்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டிருந்கிறார். அந்த புகைப்படங்களுடன் அவரை பற்றி பதிவுகளும் சமூக ஊடகங்களில் தற்போது பரவி வருகிறது. கோவையில் பள்ளி மாணவிக்கு , வகுப்பு ஆசிரியை ஒருவரே பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக சேத்துப்பட்டு அருகே பள்ளி மாணவியை வீட்டிற்கு வா என அழைத்த ஆசிரியரை இளைஞர்கள் தாக்கிய வீடியோ ஒன்றும் வேகமாக பரவியது. அது பற்றியும் பார்ப்போம். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தனக்கரசு 42 தணிக்கவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் தனக்கரசு இப்பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு எங்கே இருக்கிறாய் என்ன செய்கிறாய் வீட்டுக்கு வா என கடந்த மாதம் செல்போனில் பேசினாராம்.
அந்த மாணவியும் சார் நான் டி சி வாங்க போறேன் எனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்துள்ளார. ஆனால் மீண்டும் வீட்டுக்கு வா என ஆசிரியர் அழைக்கிறார். அதற்கு மாணவி நான் ஏன் வரவேண்டுமென பேசுவதாக ஆடியோ முடிந்துள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி அந்த மாணவிக்கு வந்த செல்போன் உரையாடலை வைத்து இளைஞர்கள் சதீஷ்குமார் என்கிற சத்தியா மற்றும் கோகுல் வயது (24), மனோஜ் வயது (24), செல்வராஜ் வயது (23) சேது என்கிற சேதுராமன் வயது (24), சந்துரு வயது (24) ஆகிய ஆறு இளைஞர்கள். ஆசிரியர் தனக்கரசுவை தனியாக ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு முட்டி போட வைத்து அந்த மாணவியின் செல்போன் நம்பர் உனக்கு எப்படி கிடைத்தது. திருமணம் ஆகி உனக்கு குழந்தைகள் இல்லையா, உனக்கு அக்கா தங்கச்சி இல்லையா, நாங்களும் தான் குடிக்கிறோம் ஆனால் இப்படி செய்ய மாட்டோம் உனக்கு எவ்வளவு திமிரு இருக்கும் என கேட்டு இளைஞர்கள் ஆசிரியரை தாக்கினார்கள். பின்னர் அதனை வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது வைரலான நிலையில் ஆசிரியர் தனகராசுவை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோல் ஆசிரியரை தாக்கிய மாணவர்களையும் போலீசார் தேடி பிடித்து கைது செய்து வருகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications