தொண்டாமுத்தூர் தொகுதியில் நடிகர் மன்சூரலிகான் அடேங்கப்பா குட்டி கரணம்- மீண்டும் போட்டியாம்!
கோவை: தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் நடிகர் மன்சூரலிகான் மீண்டும் போட்டியிடுகிறாராம். முன்னதாக தாம் போட்டியிடப் போவதில்லை என அறிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார் மன்சூர் அலிகான்.
லோக்சபா, சட்டசபை தேர்தல்கள் வந்துவிட்டால் போதும்.. .நடிகர் மன்சூரலிகான் செய்யும் அன்பான சேட்டைகள் அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிடும்.

கடந்த திண்டுக்கல் லோக்சபா தேர்தலின் போது மக்கள் தம்மை பார்க்க வேண்டும் என்பதற்காக காய்கறி விற்பனை முதல் அத்தனை வேலைகளையும் செய்து பார்த்தார். என்ன மக்கள்தான் ஓட்டுப் போடவில்லை.
அப்போது நாம் தமிழர் கட்சியில் இருந்தார் மன்சூரலிகான். சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் தனி கட்சி தொடங்கிய கையோடு கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
அப்புறம் என்ன தன்னை பேசுபொருளாக்குவதற்காக நாய்களுடன் நடுத்தெருவில் கொஞ்சி குப்பைகளுக்கு நடுவே அமர்ந்து குறைகளை கேட்டறிந்தார். அதேபோல் மீன்களை வெட்டும் வேலைகளை செய்தார். திடீரென நான் தேர்தலிலேயே போட்டியிடவே இல்லை என ஜகா வாங்கினார்.
இன்று வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்தது. ஆனால் மன்சூரலிகான் வேட்புமனுவைத் திரும்பப்பெறவில்லை. சுயேட்சை சின்னம் பெறுவதற்காக தொண்டாமுத்தூரில் முகாமிட்டிருக்கிறார்.
அடேங்கப்பா செம குட்டிகரணம் இருக்கே!
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications