'வேறு விஜயை பார்ப்பதுபோல இருக்கிறது'.. நடிகை ராதிகா என்ன சொல்லியிருக்காங்கனு பாருங்க
கோவை: விஜய் அதிகமாக பேசவே மாட்டார், சின்ன வயதிலிருந்தே அப்படித்தான் இருந்தார். திடீரென இந்த மாநாட்டில் விஜய் பேசியபோது வேறு விஜயைப் பார்ப்பதுபோல இருந்தது என்று நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
கோவை மக்கள் சேவை மையம் சார்பில், மோடியின் மகள் திட்டத்தின் கீழ் 150 பெண் குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கும் விழா கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் கொங்குநாடு கலைக் கல்லூரியின் செயலாளர் வாசுகி பரமசிவம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

எம்எல்ஏ வானதி சீனிவாசன், நடிகை ராதிகா ஆகியோர் மாணவிகளுக்கு தீபாவளி பரிசுகளை மாணவிகளுக்கு வழங்கினர். அதை்தொடர்ந்து, நடிகை ராதிகா சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெண்களுக்காக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு எனது பாராட்டுகள்.
தமிழக அரசு டாஸ்மாக்கை கட்டுப்படுத்த வேண்டும். இதுகுறித்து மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலக்கு வைத்து விற்பனை செய்வது என்பது சரியானது இல்லை. அந்த செயல் மிகவும் வருத்தம் அளிக்கிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். அதனை விட்டுவிட்டு அவர் அரசியலுக்கு வர வேண்டும் என நினைத்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவரவர் பாதையில் அவங்க கொள்கையை முன்னெடுக்கின்றனர்.
சின்ன வயதில் இருந்தே விஜய்யை எனக்கு நன்றாக தெரியும். அவர் தந்தையின் இயக்கத்தில் நிறைய படம் நடித்து இருக்கின்றேன். சின்ன வயதில் இருந்தே விஜயை பார்த்து இருக்கின்றேன். அவர் இப்படி ஒரு முடிவு எடுத்து இருப்பது வித்தியாசமாக இருக்கின்றது. விஜய் படங்கள் எதுவும் தடை செய்யப்படவில்லை.
விஜய் படங்களை யார் தடுத்தார்கள் என்று எனக்கு தெரியாது. நீதிமன்றம் மூலமாக அவர்கள் படத்தை திரையிட்டு இருக்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள நிறம் சமத்துவ மக்கள் கட்சியின் நிறம்தான். ஆனால், அந்த நிறத்தை அவர் பயன்படுத்தி இருப்பது நல்ல விஷயம்தான். பாஜகவை தாக்குவதற்கு விஜய் யோசித்து தான் பேசுவார் என நான் நினைக்கிறேன். அதிமுகவை ஏன் தாக்கி பேசவில்லை என தெரியவில்லை. அதுகுறித்த கருத்தை என்னிடம் கேட்காதீர்கள். அவருடைய கண்ணோட்டம் வேறு. அவருடைய அரசியல் வேறு.
நான் விஜய் சின்ன பையனாக இருந்த காலத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவரது தந்தை நிறைய விட்டுக் கொடுத்து அவரை ஹீரோவாக உருவாக்கினார். விஜய் அதிகமாக பேசவே மாட்டார் சின்ன வயதிலிருந்து அப்படித்தான் இருந்தார். திடீரென இந்த மாநாட்டில் விஜய் பேசியபோது வேறு விஜயைப் பார்ப்பதுபோல இருந்தது.
போகப் போகத் தெரியும். அவர் படத்தைப் போலவே ஒன் மேன் ஷோவாக இந்த மாநாட்டில் காட்டியிருக்கிறார். அடுத்து அவரது கட்சிக்காரர்களை அடையாளம் காட்டுவார் பார்க்கலாம். பெண் தலைவர்களை கட்டியிருக்கிறார். அதிமுகவில் என் தலைவர் ஜெயலலிதா இருக்கிறார், பாஜகவில் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள்.
திராவிட மாடலை எதிர்க்கிறேன் என்று தான் சொல்லியிருக்கிறார். திராவிட கட்சி என்று விஜய் சொல்லவில்லை. பெரியார் எங்கள் தலைவர் என்று சொல்லி இருப்பது குறித்த கேள்விக்கு, என் தந்தை எம்.ஆர்.ராதா திராவிடர் கழகத்தின் முன்னோடி. பெரியார் அவர்களுடன் கடைசி வரை அந்த கட்சியில் இருந்தார்.
நான் கேள்விப்பட்டவரை நான் பார்த்தவரை பெரியார் அவர்களின் அடிப்படையே நாத்திகம். மூடநம்பிக்கையை எதிர்ப்பது தான். அதுதான் எனக்குத் தெரிந்த தகவலும். அதை இல்லை என்று விஜய் சொல்லிவிட்டார் என்று கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications