‘கலைஞர் ஐயா.. ஸ்டாலின் ஐயா..’ இளையராஜா கச்சேரியில் அண்ணாமலை பேச்சு.. அதிமுக பாஜக மோதல்
கோவை: இளையராஜா இசை கச்சேரியில் பாஜக அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மேடை ஏறி பேசிய அண்ணாமலை, கருணாநிதி மற்றும் ஸ்டாலின் பெயர்களை குறிப்பிடும் போது ஐயா என்று குறிப்பிட்டார். இது அதிமுக மற்றும் பாஜகவினரிடையே சமூகவலைதளங்களில் மோதலை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, தனியார் ரியல் எஸ்டேட் வளாகத்தில் இசைஞானி இளையராஜா இசை கச்சேரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். மேடை ஏறிய அண்ணாமலை, இளையராஜா காலில் விழுந்து வணங்கினார். மேலும் இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தினார்.

அப்போது அங்கு சூழ்ந்திருந்த பாஜகவினர், 'பாரத் மாதாகி ஜே' என்று கோஷம் எழுப்பினர். மேடையில் பேசிய அண்ணாமலை," என்னைப் பொறுத்தவரை இசை கடவுள் இளையராஜா தான். அவருடன் நாம் எப்போதும் இருக்கிறோம். இளையராஜாவை பார்க்க நாம் அனைவரும் எல்லாவற்றையும் மறந்து வணிகர்களாக, இசை பிரியர்களாக இங்கே நின்று கொண்டிருக்கிறோம்.
இசைஞானி இளையராஜா இதுவரை இசையமைத்த அனைத்து இசையையும் நாம் முழுமையாக கேட்க வேண்டும் என்றால் அதற்கு 17 வருடங்கள் தேவைப்படும். திரை இசைத்துறையில் 49 வருடங்கள், 1,500 திரைப்படங்கள், 10,000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.
நம்முடைய மகிழ்ச்சியான நேரமாக இருந்தாலும் சரி, துக்கம் , தூக்கம் என அனைத்து நேரங்களிலும் அவரின் பாடல்கள் உடன் இருக்கும். இவை அனைத்தையும் கடந்து தமிழகத்தின் அடையாளமாக, தனி பெருமையாக, மொத்த இந்தியாவுக்கான பெருமையாக உள்ளார். ஆசியாவை சேர்ந்த நபர் லண்டன் சென்று சிம்பொனி இசைத்துள்ளார். அந்த நிகழ்ச்சியை நிறைவு செய்துவிட்டு நம்முடைய ஊருக்கு வந்திருக்கிறார்.
திரை இசைத் துறையில் அடுத்ததாக 50-வது வருடத்தில் அடி எடுத்து வைக்க இருக்கிறார். அனைத்து மனிதர்களும் உங்களுடன் இருக்கிறார்கள். நான் சார்ந்துள்ள கட்சியின் மோடி ஐயாவாக இருக்கட்டும், கலைஞர் ஐயாவாகட்டும், ஸ்டாலின் ஐயாவாகட்டும்.. அனைவரும் அன்பு கொடுக்கக்கூடிய நபர் நீங்கள் மட்டும் தான். எங்களுக்கு நீங்கள் எப்போதும் ஆனந்தத்தை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்." என்றார்.
அண்ணாமலையின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது அரசியல் ரீதியான விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தாலும், அவர்கள் சமூகவலைதளங்களில் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுகவை விமர்சிக்க வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்தும் பிரச்னை ஓயவில்லை.
அண்ணாமலை பேச்சுக்கு அதிமுக மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள், "திமுகவை எதிர்க்கும் யாரும் கருணாநிதி மற்றும் ஸ்டாலினை ஐயா என்று சொல்ல மாட்டார்கள். அண்ணாமலை திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளார். எப்படியாவது பாஜக - அதிமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்கள்." என்று கூறியுள்ளனர்.
இதற்கு பதிலளித்து வரும் அண்ணாமலை ஆதரவாளர்கள், "அரசியல் எதிரியாக இருந்தாலும் மேடை நாகரீகம் என்று உள்ளது. அண்ணாமலை அதை கடைபிடிக்கிறார். ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர்களை சொல்லவில்லை என்பதற்காக அதிமுகவினர் கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அண்ணாமலை பதவியில் இருந்தாலும் பிரச்னை, இல்லாவிடினும் பிரச்னை தான்." என்று கூறியுள்ளனர்.
-
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
அடிச்சு தூக்க போகுது தமிழக பாஜக.. இப்படியொரு சடன் மாற்றம்? இங்கே திமுக, அங்கே தவெக! தாங்குமா தாமரை? -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
Aavin: பச்சை நிற பால் பாக்கெட் விவகாரம்! பொய் தகவல் சொல்லும் ஆவின் நிர்வாகம்! அண்ணாமலை கண்டனம் -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications