கரூர்காரர் வெளியே வருவதற்காக இந்த கரூர்காரரை ஜெயிக்க வைக்க திமுக திட்டம்.. சொல்வது அதிமுக வேட்பாளர்!
கோவை: ஜெயிலில் இருக்கும் கரூர்காரர் வெளியே வருவதற்காக இன்னொரு கரூர்காரரை கோவையில் ஜெயிக்க வைக்க டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளது திமுக என கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் களத்தில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவும் நிலையில், கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை களமிறங்கி இருப்பதால் கோவை லோக்சபா தொகுதி இந்த முறை விஐபி அந்தஸ்து கொண்ட தொகுதி ஆகியுள்ளது.

கோவை களத்தில் வேட்பாளர்கள்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக நிற்கிறார். திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் களமிறங்குகின்றனர். திமுக vs அதிமுக vs பாஜக என நேருக்கு நேர் மும்முனை மோதல் நடக்கும் களமாக உள்ளது கோவை. 3 கட்சிகளுமே தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், கோவையில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்த நிகழ்வில் பேசிய கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், தனக்கு எதிராக பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு சவால் விடுத்தார்.
கரூர்காரரை ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வர: அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேசுகையில், "கரூரில் இருந்து ஒருவர் கோவைக்கு வந்து போட்டியிடுகிறார். அவர் திமுக வேட்பாளர் பெயரை சொல்கிறார். ஆனால் எனது பெயரை சொல்ல மறுக்கிறார். ஜெயலலிதா வைத்த எம்ஜிஆரின் பெயர் என்பதால் எனது பெயரை சொல்ல பயமா? ஆனால் நான் அவரது பெயரைச் சொல்லியே பேசுவேன்.
அண்ணாமலை கரூரில் நின்றால், டெபாசிட் கிடைக்காது என்பதால் கோவையில் வந்து நிற்கிறார். ஒரு கரூர்காரர் ஜெயிலில் இருக்கிறார். அவர் வெளியே வருவதற்காக இன்னொரு கரூர்காரரை ஜெயிக்க வைக்க டம்மி வேட்பாளரை திமுகவில் நிறுத்தியுள்ளார்கள் என வாட்ஸ் அப்பில் வந்தது. அது உண்மையா எனத் தெரியவில்லை." என்றார்.
அண்ணாமலைக்கு சவால்: மேலும் பேசிய சிங்கை ராமச்சந்திரன், "அண்ணாமலைக்கு ஒரு சவால். கோயம்புத்தூரில் என்று இல்லை. எங்கு வேண்டுமானாலும் மேடை போடுங்கள். இருவருக்கும் தெரிந்த என்ன மொழியில் வேண்டுமானாலும் பேசலாம். எத்தனை பேரை வேண்டுமானாலும் கூப்பிடுங்கள். கோயம்புத்தூர் வளர்ச்சிக்காக பேச நான் தயார். அண்ணாமலை தயாரா? தயார் என்றால் நேரம், நாள், இடம் குறியுங்கள். விவாதிக்க நான் வருகிறேன்.
இங்கு ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சொன்னார்கள். ஆனால், அது பாஜகவில் வேறு யாராவது போட்டியிட்டால் தான் அந்த நிலை. இப்போது அண்ணாமலை போட்டி போடுவதால் அதைவிட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
அண்ணாமலை கடந்த ஒரு வருடமாக ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக தலைவர்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார். அதிமுக தொண்டர்கள் உணர்வுகளை புண்படுத்திவிட்டு அதிமுகவின் கோட்டையிலே, எஸ்.பி.வேலுமணியின் கோட்டையிலே வந்து நின்றால் வெற்றி பெற விட்டுவிடுவோமோ? அண்ணாமலை, ஐ அம் வெயிட்டிங் ஃபார் யூ" என்று சவால் விடுத்தார்.
பாஜகவை வெளுத்த வேலுமணி: முன்னதாக, இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "கோவையில் அதிமுகவுக்கு போட்டி பாஜக கிடையாது. பாஜக மூன்றாம் இடம்தான். அண்ணாமலைக்கு சொந்த ஊர் கரூர். அண்ணாமலை ஏன் கரூரில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுகிறார்? பாஜகவுக்கு 4 சதவிகிதம் தான் வாக்குகள் இருக்கிறது. பாஜக கூட்டணியில் இருக்கும் எந்தக் கட்சிக்கு கோவையில் வாக்கு வங்கி இருக்கிறது?
பாஜக சொல்வது போல் அவர்கள் வளர்ந்து விட்டதாகவே வைத்துக்கொள்வோம். ஒரு பத்து சதவிகிதம் வாக்கு வங்கிக்கு வளர்ந்திருப்பார்களா? அந்த பத்து சதவிகித்தை வைத்து வெற்றி பெற்றுவிட முடியுமா? அதிமுக 34 சதவிகிதம் வாக்கு வங்கி வைத்துள்ள பெரிய கட்சி. நமக்கு பிறகு தான் திமுகவே. இதுதான் தேர்தல் கணக்கு. திமுக - அதிமுக இடையே தான் நேரடி போட்டி" என்றார்.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications