கோவையில் ட்விஸ்ட்.. செங்கோட்டையன், வேலுமணி திடீர் சந்திப்பு...இபிஎஸ்-க்கு எதிராக புதிய பிரளயம்?

Subscribe to Oneindia Tamil

கோவை: அதிமுகவில் கலகக் குரல் எழுப்பி வரும் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் நேற்று திடீரென கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினரை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எஸ்பி வேலுமணியும் சசிகலா ஆதரவாளர் செங்கோட்டையனும் கோவையில் நேற்று ஆலோசனை நடத்தியது அதிமுகவின் புதிய பிரளயத்தை ஏற்படுத்துமோ? என்ற சந்தேகத்தையும் எழுப்பி இருக்கிறது.

அதிமுகவில் சசிகலாவின் தீவிர விசுவாசியான முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பகிரங்கமாக போர்க்கொடி தூக்கினார். இது தொடர்பாக இன்று வரை எடப்பாடி பழனிசாமி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் கே.ஏ.செங்கோட்டையனோ தொடர்ந்து அதிமுகவின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்; பெரும்பாலான கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை உச்சரிப்பதே இல்லை. அதற்க்கு மாறாக, ஒருங்கிணைந்த அதிமுகவால்தான் வெல்ல முடியும் என்பதை ஆணித்தரமாகவும் செங்கோட்டையன் பேசி வருகிறார்.

aiadmk sengottaiyan sp velumani

இன்னொரு பக்கம், இவ்வளவு நடந்தும் இன்னமும் எடப்பாடி பழனிசாமி தம்மிடம் போனில் கூட பேசவே இல்லை என்கிற ஆதங்கத்தையும் தமது ஆதரவாளர்களிடம்ம் செங்கோட்டையன் கொட்டி வருகிறார். இந்த பின்னணியில் கோவையில் அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனை நடைபெற்ற போது முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் அம்மன் அர்ஜூன் வீடு முன்பாக திரண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கே.ஏ.செங்கோட்டையனும் அங்கே ஆஜராக ஒட்டுமொத்த கவனமும் இருவரது பக்கமும் திரும்பியது. இந்த தகவல் எடப்பாடி பழனிசாமிக்கும் பாஸ் செய்யப்பட்டதாம்.

சீனியர்களான எஸ்பி வேலுமணியும் செங்கோட்டையனும் ஒருசேர சந்தித்து ஆலோசனை நடத்தியது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறதாம். இதனால் அதிமுகவில் அடுத்ததாக புதிய பிரளயத்தை இருவரும் கிளப்ப்பிவிடுவார்களோ என்கிற அச்சமும் எடப்பாடி தரப்புக்கு இருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+