மேடைக்கு வந்து சொல்லுங்க.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீர் பரபரப்பு!
கோவை: கோவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில், தொழில்முனைவோர் ஒருவர், தனக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தார். இதனால் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அவரை மேடைக்கு அழைத்து குறைகளை சொல்லுமாறு கூறினார் நிர்மலா சீதாராமன்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை வந்துள்ளார். கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் இன்று நடைபெற்ற வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது, தொழில்முனைவோர் சிலர் தங்களுக்கு வங்கிக் கடன் தராமல் இழுத்தடிப்பதாக புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியின்போது கடன் ஆணைகளை வழங்கி நிர்மலா சீதாராமன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சிறு, குறு தொழில்முனைவோருக்கு உத்தரவாதம் இன்றி கடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தபோதும் தனக்குக் கடன் மறுக்கப்படுவதாக தொழில்முனைவோர் சதீஷ் என்பவர் குற்றம்சாட்டினார்.
செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ், "நான் பிரதமர் அலுவலகத்திற்கும் புகார் அளித்துள்ளேன். அரசு கடன் உதவி உறுதியாக வழங்கப்படும் என அறிவித்த நிலையில் ஏன் எனக்கு கடன் தரவில்லை என கேட்க வந்தேன்." எனத் தெரிவித்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், குற்றம்சாட்டிய சதீஷை மேடைக்கு அழைத்தார்.
"சும்மா லோன் கொடுக்கிறோம் காட்டுவதற்காக 10 பேருக்கு லோன் கொடுக்குறாங்க எனச் சொல்கிறார்கள். ஜனநாயகத்தின் தூணாக உள்ள மீடியா, அவரிடம் பேட்டி எடுத்து நல்ல வேலை செய்திருக்கிறார்கள். அன்பு நண்பரே வாங்க மேல.. மோடி ஆட்சியில் எல்லோரின் முன்னேற்றத்திற்கும் பாடுபடுவோம். உங்களுக்கு லோன் கிடைக்கவில்லை என்பதை மேடையில் வந்து சொல்லுங்கள்" என அழைத்தார் நிர்மலா சீதாராமன்.
இதையடுத்து மேடையேறிய தொழில்முனைவோர் சதீஷ், தனக்கு வங்கிக் கடன் மறுக்கப்படுவதாக கூறி, விவரங்களைத் தெரிவித்தார். முதலில் கடன் வழங்க ஒப்புதல் அளித்தார்கள். ஆனால் அதன் பிறகு வரவில்லை, ரூ.40 லட்சம் கடனுக்கான உத்தரவாதத்தை வழங்கத் தயார் என்று கூறிய பிறகும் தனக்கு கடன் கிடைக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். சதீஷின் முறையீடு பற்றி சம்பந்தப்பட்ட வங்கியிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற வங்கிக் கடன் வழங்கும் நிகழ்வின்போது தொழில்முனைவோர் ஒருவர் தனக்கு வங்கி கடன் கிடைக்கவில்லை என புகார் சொன்னதையடுத்து, அவரை மேடைக்கு வந்து குறையை தெரிவிக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications