கோவை பெண் பாலியல் பலாத்காரம்.. திருமணம் செய்வதாக ஏமாற்றியதாக தொழிலதிபர் மீது. 3 பிரிவின் கீழ் வழக்கு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாக பாலியல் பலாத்காரம் செய்த ஆனந்த் சர்மா என்பவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பணிபுரிந்து இந்தியா திரும்பிய இளம் பெண் ஒருவர் கோவையில் வசித்து வருகிறார். கணவனை பிரிந்து மூன்று குழந்தைகளுடன் வசிக்கும் அவருக்கு தொழில் ஆர்வம் அதிகமானதால் அதன் விவரங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.

Anand Sharma is accused of marrying a Coimbatore woman under Section 3

,அவரை தொழில் ரீதியாக தொடர்பு கொண்ட ஆனந்த் சர்மா அவருடன் நெருக்கமாக பழகியிரிந்தார். ஆனந்த நட்புடன் பழக அந்த பெண் கணவரை பிரிந்ததனை சாதகமாக்கி தானும் மனைவியை பிரிந்தவரென நெருக்கமாக பழகியிருக்கின்றார். இதனடையே ஆனந்தின் நட்பு அந்த பெண்ணுக்கு நல்ல ஆறுதலாக தெரிந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இரவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

ஒரு நாள் ஆனந்த் வெளியூருக்கு சென்றுள்ளார்கள் திருமணம் செய்வதாக கூறி அங்கு வைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் ஆனந்த். ஆனந்தின் வார்த்தையில் ஏமாந்தது பின்னரே அவருக்கு தெரியவந்துள்ளது. திருமணமாகி விவாகரத்தான பெண்களை ஏமாற்றி உல்லாசமாக ஆனந்த் வாழ்ந்தது தெரியவந்தது.

இதையடுத்து தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றிய ஆனந்த் மீது அந்த பெண் தேசிய மகளிர் ஆணையத்தில் பகார் கொடுத்தார் போலிஸார் விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது.

இதனை அடுத்து கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் மீண்டும் புகார் கொடுத்தார். இதையடுத்து கோவை ஓட்டல் அறையில் பாலியல் பலத்காரம் செய்தது, இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் ஆனந்த் மீது வழக்கு வதிவு செய்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+