“வாக்களிக்காத கோவை மக்களுக்கு கொரோனா தடுப்பூசி தராமல் பழி வாங்கியது திமுக” - அண்ணாமலை குற்றச்சாட்டு!
கோவை: "திமுக 2021ல் ஆட்சிக்கு வந்தபோது, கொரோனா தொற்றுநோய் காலத்தில் வேண்டுமென்றே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளை, தமிழகத்திலேயே குறைவான எண்ணிக்கையில் கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு வழங்கி, தங்களுக்கு வாக்களிக்காத கோயம்புத்தூர் மக்களைப் பழி வாங்கியது திமுக" என அண்ணாமலை பேசியுள்ளார்.
கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மலுமிச்சம்பட்டியில் கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் அண்ணாமலை பேசுகையில், "கோயம்புத்தூர் மாநகரத்துக்கு மெட்ரோ ரயிலுக்கான திட்டத்தை முழுமையான விவரங்கள் கொடுக்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக. இதனால், முழுமையான விவரங்கள் அனுப்புங்கள் என்று மத்திய அரசு கேட்டபோது, மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது. கோயம்புத்தூருக்கு மெட்ரோ திட்டம் கொண்டு வருவது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொறுப்பு என்று உறுதி அளிக்கிறோம்.
கோயம்புத்தூரில் உலகத் தரம் வாய்ந்த சாலை அமைக்க, மத்திய அரசு, ரூ.3,500 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால், அதற்கான நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்காமல், திமுக மக்களை வஞ்சித்து வருகிறது. கோயம்புத்தூர் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, 6 ஏக்கர் நிலத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக. இப்படி, தொடர்ந்து, கோவை மக்களை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது திமுக. தமிழகத்தை, குறிப்பாக கொங்கு பகுதியை குப்பைக்கூடமாக மாற்றி வைத்திருக்கிறது திமுக.
நூறு நாள் வேலைத் திட்டத்தை, 150 நாட்கள் ஆக்குவோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, ஐந்து ஆண்டுகள் கடந்தும் இன்னும் நிறைவேற்றவில்லை. நமது பிரதமர், அதனை 125 நாட்களாக உயர்த்தி வழங்கியிருக்கிறார். இந்தியாவிலேயே 100 நாள் வேலைத் திட்டத்திற்கு அதிக நிதி பெற்ற மாநிலம் தமிழகம் தான். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, இதனை நிச்சயம் 150 நாட்களாக உயர்த்துவோம்.
ஒவ்வொரு முறை திமுக ஆட்சிக்கு வரும்போதும், கோயம்புத்தூர் பாதிக்கப்படுகிறது. திமுகவின் 1996 - 2001 ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கோயம்புத்தூர் குண்டு வெடிப்பினால், ஐம்பதுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்தோம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கை, கால்கள், கண்களை இழந்தனர். இந்த குண்டுவெடிப்பு நடக்காமல் இருந்திருந்தால், இந்தியாவின் முதல் பத்து நகரங்களில் ஒன்றாக, கோயம்புத்தூர் இருந்திருக்கும்.
திமுகவின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தில், கடுமையான மின்தடையால், கோயம்புத்தூர் சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு மூடப்பட்டன. ஐந்து ஆண்டுகள் கோயம்புத்தூர் இருட்டில் இருந்தது. திமுக 2021ல் ஆட்சிக்கு வந்தபோது, கொரோனா தொற்றுநோய் காலம். வேண்டுமென்றே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளை, தமிழகத்திலேயே குறைவான எண்ணிக்கையில் கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு வழங்கி, தங்களுக்கு வாக்களிக்காத கோயம்புத்தூர் மக்களைப் பழி வாங்கியது திமுக.
கோயம்புத்தூரை நாசமாக்கிய இத்தகைய திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் எப்போதும் கோயம்புத்தூர் மக்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது. வரும் 2026 தேர்தலுக்கு, இன்னும் 100 நாட்கள் இருக்கின்றன. தமிழக பாஜக சகோதரர்களும், அஇஅதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி சகோதரர்களும் கடுமையாக உழைத்து, கோயம்புத்தூரில் உள்ள பத்து தொகுதிகளிலும் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனப் பேசி உள்ளார்.
-
உடனே சென்னை வாங்க.. அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் விரையும் அண்ணாமலை.. பாஜக போட்ட உத்தரவின் பின்னணி -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது? -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
"ஸ்டாலின் மருமகன்".. நேரடி அரசியலில் களமிறங்கும் சபரீசன்? திமுக கூட்டத்தில் மனைவியுடன் பங்கேற்பு! -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி











Click it and Unblock the Notifications