Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அண்ணாந்து" பார்க்க வைக்கும் அண்ணாமலை.. நள்ளிரவில் "ஹைவேஸில்" யார்னு பாருங்க.. நிமிருதா கொங்கு பாஜக?

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின், திருப்பூர் மாவட்ட பாதயாத்திரை வீடியோ, போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.. என்ன காரணம்?
நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை, காந்திஜியின் தண்டி யாத்திரை முதல் அத்வானியின் ரத யாத்திரை வரை ஏராளமான யாத்திரைகளை கண்டுள்ளது இந்த நாடு..

அவ்வளவு ஏன், நம் தமிழகத்தில்கூட, இந்தி திணிப்பு முதல் வைகோவின் பாதயாத்திரை வரை, அழியாத தடங்களை பதித்து சென்றுள்ளன.. இதுபோன்ற பாதயாத்திரைகளால், மக்களுடன் நேரடியாக சந்தித்து பேசவும், அவர்களுடன் நெருங்கி பழகவும் தலைவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். இதனால், ஏற்படும் தாக்கங்களும், அதிர்வுகளும் எப்போதுமே சற்று அதிகம்..

 Annamalai Big Plan and TN BJP Leader annamalai has food on roadside at midnight on Kovai Tiruppur High Ways

கர்நாடக தேர்தல்: அப்படித்தான், சமீபத்தில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை அமைந்தது.. மக்களின் மனசில், சம்மணம் போட்டு உட்கார்ந்துவிட்டார். அதன்பலனையும் கர்நாடக தேர்தலில் கண்கூடாக பார்க்க முடிந்தது.

அந்தவகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரையும் அமைந்து வருகிறது.. யாத்திரைக்கான அறிவிப்பை வெளியிட்டபோதே, திமுகவை டார்கெட் செய்தே, இந்த யாத்திரை அமைந்துள்ளதாக கூறப்பட்டது..

முதல்கட்ட பயணம்: சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி என்று ஏற்கனவே அண்ணாமலை யாத்திரை நடத்தி முடித்துவிட்டார். இந்த பகுதிகளிலெல்லாம், மக்களுடன் நேரடி தொடர்பு அண்ணாமலைக்கு கிடைத்துள்ளது மிகப்பெரிய அம்சமாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதற்கு பிறகு, "என் மண் என் மக்கள்" என்ற 2வது கட்ட யாத்திரையை துவங்க போவதாகவும் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.. ஆனால், இந்த யாத்திரைகளில் சில அதிரடிகளை செய்ய போவதாக சொல்லப்பட்டன.

மாற்றங்கள்: குறிப்பாக, இந்த யாத்திரை, வெறுமனே, ஒரு நடைபயணமாக முடிந்துவிடாமல், பாதயாத்திரை சென்ற இடங்களிலெல்லாம் கிராமங்களிலேயே பாஜகவினர் தங்கி, மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து, தீர்வு காண வேண்டும் என்று மேலிட தரப்பிலிருந்து உத்தரவிடப்பட்டிருந்ததாம். அதுவும், மக்களோடு மக்களாக, பாஜகவினர் கிராமங்களில் தங்கி, இத்தகைய பணிகளை மேற்கொள்ளும்போது, பாஜகவின் கிராஃப் உயருமென்றும் நம்பப்படுகிறது.

அதுமட்டுமல்ல, ஆன்மீக உணர்வை வளர்ப்பதற்கு முக்கியத்துவத்தை தராமல், தமிழக பாஜகவில் பலர் ஒதுங்கி இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த தொய்வையும் களைய வேண்டும் என்ற டார்கெட்டும் தற்போது கையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

திருப்பூர் மாவட்டம்: அந்தவகையில், தன்னுடைய கொங்கு பகுதி என்பதாலோ என்னவோ, அண்ணாமலையின் தற்சமய பாதயாத்திரையில் வீர்யம் சற்று கூடியுள்ளது..

அந்தவகையில், தற்போது திருப்பூர் மாவட்டத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். நேற்றுகூட, பல்லடம், அவிநாசி உள்ளிட்ட இடங்களில் இரவு வரை அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். நடைபயணத்தின்போது அவருடன் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானவர் பங்கேற்றனர்.
அதிரடிகள்: அண்ணாமலையின் இந்த நடைப்பயணத்தின்போது, கோவை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சங்கீதா, திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.. இதனால் பதறிப்போன தலைவர்கள், உடனடியாக தகவல் தந்து, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.. இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கே இரவு 10.30 மணியாகிவிட்டது.. அதற்குபிறகுதான், சோமனூர் பஸ் ஸ்டாண்ட்டில் அண்ணாமலை உரை நிகழ்த்தினார். பிறகு, 11.45 மணிக்கு தன் பேச்சை முடித்துக்கொண்டு, காரில் கிளம்பினார்.

கோவை திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், திடீரென தன்னுடைய காரை நிறுத்த சொன்னார் அண்ணாமலை.. அங்கு சாலையோரத்திலேயே, இரவு உணவு சாப்பிட்டார். அவருடன், வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்களும் உணவை சாப்பிட்டனர். காரில் உட்கார்ந்தபடியே, முன்சீட்டில் அண்ணாமலையும், பின்சீட்டில் வானதியும், காருக்கு அருகில் நிர்வாகிகளும், இரவு உணவை சாப்பிட்டு முடித்தனர்..

பரபரப்புகள்: நள்ளிரவில் சாலையோரம் காரில் உட்கார்ந்து, சாப்பிடும் அண்ணாமலையின் இந்த போட்டோக்கள்தான், இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.

அதுமட்டுமல்ல, முன்னதாக, சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வாகன பிரச்சாரத்தையும் மேற்கொண்டார் அண்ணாமலை.. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 2 மணி நேரம் தாமதமாக வந்த அண்ணாமலையை பாஜக தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

முதியவர்: அப்போது முதியவர் ஒருவர் அண்ணாமலைக்கு கைகொடுக்க வந்தாராம்.. இதனை கவனித்த அண்ணாமலைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகாரி ஒருவர், உடனடியாக முதியவரை தள்ளிவிட்டு அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டாராம். உடனே இப்பார்த்த அங்கிருந்த பாஜக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டார்களாம்.

திமுக எதிர்ப்பு, பாஜக சாதனை, காரசார பேச்சுக்கள், திடீர் திடீர் மயக்கம், தள்ளுமுள்ளு என இப்படியான பரபரப்புகளுக்கு நடுவே, கொங்கு மக்களின் மனதை வென்று கொண்டிருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. எனினும், இவையெல்லாம் ஓட்டுக்களாக திரும்ப வருமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+