கந்தனுக்கு அரோகரா.. தமிழ் கடவுள் முருகனுக்கு காவடி எடுத்து நடனமாடிய பாஜக தலைவர் அண்ணாமலை
கோவை: கோவையில் நொய்யல் திருவிழாவில் தமிழ் கடவுள் முருகனுக்கு காவடி எடுத்த பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு நடனம் ஆடினார்.
ஊழலுக்கு எதிராகவும் பாஜகவின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கியும் என் மண் என் மக்கள் எனும் நடைப்பயணத்தை பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ளார். ராமநாதபுரத்தில் தொடங்கிய இந்த யாத்திரை மதுரை, நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் என தினமும் போய்க் கொண்டே இருக்கிறது.

அவ்வப்போது அண்ணாமலை ஓய்வு எடுக்கும் வகையில் இந்த பயணத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. செல்லும் இடங்களில் எல்லாம் பாஜகவினர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள்.
தனது பாதயாத்திரையின் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் அண்ணாமலை இருக்கிறார். கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் நடந்து வரும் நொய்யல் திருவிழாவில் அவர் கலந்து கொண்டார். 5 ஆம் நாள் நிகழ்வில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அவர் அப்போது காவடி எடுத்து அங்கு பக்தி பரவசத்துடன் நடனமாடினார்.

மேலும் நொய்யல் ஆரத்தி வழிபாட்டிலும் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் உக்ரைன், ரஷ்யா போருக்கு பிறகு உலக நாடுகளில் 200 சதவீதம் அளவுக்கு எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் மட்டும் உயராமல் அதை மத்திய அரசு கட்டுப்படுத்தியது.
காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பதன் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே கர்நாடகா அரசு கேள்விக்குறியாக்கியுள்ளது. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications