தமிழ் சினிமாவில் வன்முறை, சாதி.. இரண்டையும் முன்னிறுத்துவதை நிறுத்துங்க.. அண்ணாமலை பேட்டி!
கோவை: சினிமாவில் வன்முறை, சாதி போன்றவற்றை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும் என்று தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் எல்லோருக்கும் பொறுப்பு இருப்பதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்தில் என்டிஏ கூட்டணி இறுதியாகும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின், அண்ணாமலை பல்வேறு விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே கோவையில் சில தொழில்களை செய்து வரும் அண்ணாமலை, அடுத்ததாக பெங்களூரில் ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்கி இருக்கிறார். இதனிடையே கோவால் ஐயர்ன்மென் போட்டியிலும் பங்கேற்றிருந்தார்.

சில வார இடைவெளிக்கு பின் மீண்டும் அரசியல் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள அண்ணாமலை, கோவையில் தமிழக பாஜக விவசாய அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பாக கோவையில் வரும் நவம்பர் 19ஆம் தேதி மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வருகிறார். இந்த மாநாட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகளையும், விஞ்ஞானிகளையும் சந்திக்க உள்ளார். அதேபோல், திரைப்படங்களில் வன்முறை, சாதி போன்ற விஷயங்களை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும். குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது. கோவை மாணவி விவகாரத்தில் காவல்துறை அவர்களின் வேலையில் கோட்டை விட்டுள்ளார்கள்.
காவல்துறையும் தனது தவறுகளை திருத்திக் கொண்டு செயல்பட வேண்டும். காவல்துறையை இன்னும் சிறப்பாக முதல்வர் ஸ்டாலின் கையஆள வேண்டும். அதேபோல் பீகாரில் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும். பீகாரை போலவே தமிழ்நாட்டிலும் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். பீகார் தமிழ்நாடு அளவிற்கு வளர்ந்திருக்கிறதா என்றால் இல்லை. அதனால் இங்கு அதிகளவில் மக்கள் வாய்ப்பு தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு விளையாட்டை பொறுத்தவரை எப்போதும் சிறந்த மாநிலம். தமிழகத்திலும் அயர்ன் மேன் போன்ற நிகழ்வுகளை நடத்திட வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் தேர்தல் இன்னும் சூடு பிடிக்கவில்லை. மக்கள் இன்னும் தேர்தலுக்கு தயாராகவில்லை. டிசம்பர் மாதத்தில் அனைத்தும் சரியான கோணத்தில் விழுந்து கூட்டணி உறுதியாகும். இறுதிப்போட்டிக்காக என்டிஏ கூட்டணி தயாராகிக் கொண்டு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்











Click it and Unblock the Notifications